;
Athirady Tamil News

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 22வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)

0

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 22வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)
################################

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாஸ்அண்ணா” என அன்புடன் அழைக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவரோடு மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்திரண்டாவது நினைவாண்டு தாயகத்திலே உணர்ச்சிபூர்வமாக நினைவு கூறப்பட்டது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புலம்பெயர்ந்து வாழும் தோழர்களின் கூட்டுநிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்கு அமரர் தோழர் மாணிக்கதாசன் நினைவாக உலருணவுப் பொதிகள் இன்றைய நாளில் பல்வேறு கிராமங்களில் வாழும் குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வழங்கி வைக்கப்பட்டது.

ஈழமண் விடுதலைக்காக ஈழ வரலாற்றில் தொடக்ககால போராளியாக போராட்ட தலைமைகளின் நம்பிக்கைக்குரிய போராளியாக, பயமே தெரியாத தளபதியாக, இளைஞர்கள் பலர் இவரின் மந்திரப் புன்னகைக்கு கட்டுப்பட்டு அணிஅணியாக தாயக மண்மீட்பு போராட்டத்தில் இணைந்து மாபெரும் இயக்கத்தின் படையினை வழிப்படுத்தும் தளபதியாக மண்விடுதலைக்காக வாழ்ந்த வேளையில், இந்திய இலங்கை உடன்படிக்கை ஒப்பந்தத்தை ஏற்று ஆயுத ஒப்படைப்பு செய்து யாருக்காக போராட புறப்பட்டோமோ அந்த மக்களின் நல்வாழ்வுக்காக அரசியல் களப்மணியில் காத்திரமான பங்குபணிகளை மேற்கொண்டிருந்த போது நயவஞ்சகமாக உயிர் பறிக்கப்பட்டதின் இருபத்திரண்டாம் ஆண்டினை அவரோடு வாழ்ந்த தோழர்கள் இன்று இடம்பெயர்ந்து புலம்பெயர் நாடுகளில் வசித்தாலும் தளபதி மாணிக்கதாசன் அவர்களின் நினைவு நாளில் அவரையும் அவருடன் மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் நினைவுதினத்தை தமது பங்களிப்புடன் தாயக மக்களின் துயர்துடைக்கும் நல்ல பணியினை ஆண்டுதோறும் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய நாளில் வவுனியா மறவன்குளம் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் வவுனியா சாம்பல்தோட்டம், பாரதிபுரம், நெளுக்குளம் போன்ற கிராமங்களில் வறிய நிலையில் வாழும் குடும்பங்களை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கிராமிய இணைப்பாளர்களான திரு ராதா அண்ணன், திருமதி அருள் மஞ்சுளா ஆகியோர் தெரிவு செய்து அவர்களுக்கு தளபதி மாணிக்கதாசன் அவர்கள் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ச்சியான ஊரடங்கு நிலமையும் அதனால் போடப்பட்ட தொடர் பயணத்தடை காரணமாகவும் நாளாந்த சாதாரண வாழ்வுநிலை மாற்றமடைந்து அடுத்தவேளை உணவுக்கு அங்கலாய்க்கும் நிலமை விரைவில் உருவாகும் சாத்தியக்கூறு காணப்படும் நிலையில் அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களது நினைவு நாளினை முன்னிட்டு வழங்கப்பட்ட உலருணவுப் பொதி மிகவும் முன்னேற்றகரமான செயல்வடிவமாகும்.

“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை புளொட் சுவிஸ் தோழர்களான செல்வபாலன் (சொலத்தூண்), பாபு (சூரிச்), புவி (சூரிச்), குணசீலன் எனும் குணா (சூரிச்), பிரபா (சூரிச்), தேவண்ணர் (கிளாரூஷ்), அசோக் (செங்காளன்), சித்தா (செங்காளன்), ரமணன் (ரப்பேர்ஸ்வில்) சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிப்பவர்களும் சூரிச் சபையில் மூப்பராக இறைபணி செய்பவருமான திருலோகன் (தோழர்.அன்ரன்), தோழர்.சுவிஸ்ரஞ்சன் ஆகியோருடன், தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), ஆகியோர் பங்களித்து இருந்தனர்.

இதற்கு நிதிப்பங்களிப்பு செய்த புலம்பெயர்ந்து வாழும் புளொட் தோழர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மதிப்புமிகு நன்றியினையும் வாழ்த்தினையும் பெருமதிப்புடன் தெரிவித்துக் கொள்கிறது.

அதேவேளை அமரத்துவமடைந்த தளபதி தோழர் மாணிக்கதாசன்.. மற்றும் தோழர் இளங்கோ தோழர் வினோஆகிய கழக கண்மணிகளுக்கு வீரவணக்க அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

02.09.2021

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.