;
Athirady Tamil News

திருமதி ஆ.கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (படங்கள் வீடியோ)

0

திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (படங்கள் வீடியோ)
###################################

லண்டனில் வசிக்கும் திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் மாணவர்களுக்காள இடர்கால கற்றலுக்கான வசதியும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

புங்குடுதீவைச் பூர்வீகமாக் கொண்ட அமரர்கள் சொக்கர் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும் லண்டனில் வசிக்கும் ஆனந்தன் என அழைக்கப்படும் ஆனந்தலிங்கம் அவர்களின் மனைவியும், அக்குடும்பத்தின் மருமகளுமான லண்டனில் வசிக்கும் திருமதி.கிரிஷா ஆனந்தலிங்கம் அவர்களின் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் கிராமமொன்றில் ஒரு குடும்பத்துக் குழந்தைகள் சிறுவர் சிறுமியர்கள் ஒன்று கூடி கொரோனா பரவலைத் தடுக்கும் கைமுறைகளொடு சமூக இடைவெளியை கருத்திற் கொண்டு பிறந்தநாள் நிகழ்வை ஒழுங்குபடுத்தி கொண்டாடினார்கள்.

அதேநேரம் திருமதி கிரிஷா ஆனந்தலிங்கம் அவர்களது நிதிப் பங்களிப்பில் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கும், பாலர் பாடசாலை குழந்தைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது..

இன்றைய நாளில் லண்டனில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி கிரிஷா ஆனந்தலிங்கம் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்தும் அதேவேளை, தனது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளின் பாடசாலை மாணவச் செல்வங்களுக்கு தமது நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள வழங்கி வைத்தமைக்காகவும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
11.09.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.