;
Athirady Tamil News

புளொட் அமைப்பின், அரசியல் பிரிவின் செயலாளர் ஆனந்தியண்ணர் காலமானார்.. (அறிவித்தல்)

0

புளொட் அமைப்பின், அரசியல் பிரிவின் செயலாளர் ஆனந்தியண்ணர் காலமானார்.. (அறிவித்தல்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் அரசியற் கட்சியும்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சியுமான –

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) கட்சியின் செயலாளர் –

ஆனந்தி அண்ணர் என்று அழைக்கப்படும் திரு. சுப்பிரமணியம் சதானந்தன் அவர்கள் –

இன்று, ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, சுகவீனம் காரணமாக காலமானார்.

1945ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி –

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, கொம்மாந்துரை கிராமத்தில் பிறந்த ஆனந்தி அண்ணர் அவர்கள் –

1970களின் ஆரம்பம் முதலே – காந்தீயம் அமைப்பில் இணைந்து பணியாற்றி வந்திருந்தார்.

காந்தீயம் அமைப்பின் பணிப்பாளர் மருத்துவர் ராஜசுந்தரம் அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து,

அவரும் தேடப்பட்ட ஒரு சூழ்நிலையில், தலைமறைவு வாழ்வுக்குள் சென்றார்.

அதனை தொடர்ந்து – ஆனந்தி அண்ணர் அவர்கள், திரு, உமாமகேஸ்வரன் அவர்களுடன் இணைந்து –

புளொட் அமைப்பில் இணைந்து, தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் செயற்பட்டுவந்தார்.

1989ஆம் ஆண்டு, புளொட் அமைப்பு –

தனது அரசியற் பிரிவை, ஓர் அரசியற் கட்சியாக இலங்கையில் பதிவு செய்த போது –

“ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி” என்ற அந்த அரசியற் கட்சியின் செயலாளராக, புளொட் செயலதிபர் திரு, உமாமகேஸ்வரன் அவர்களால், ஆனந்தி அண்ணர் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.

அன்றிலிருந்து இன்று வரை – அவர் அந்த பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்தார்.

ஆனந்தி அண்ணரின் இறுதி கிரியை நிகழ்வுகள் –

கருவேற்புலம் வீதி, கொக்குவில் கிழக்கு கொக்குவில் என்ற முகவரியில் இருக்கும் அவரது வீட்டில் இன்று பிற்பகல் 5:00 மணிக்கு இடம்பெறும்.

§§§§§§§§§§§§§§§§§§§§


தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், மத்தியகுழு உறுப்பினரும், புளொட் செயலதிபர் தோழர்.உமாமகேஸ்வரன் அவர்களின் முழுமையான நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்து, புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பித்த காலம் முதல் இறுதிவரை செயலாளராக இருந்து கட்சியின் வளர்ச்சியே ஒரேநோக்கமாகக் கொண்டு செயல்பட்டவரும்,

ஆரம்பத்தில் “காந்தீயம்” அமைப்பின் ஊடாக முழுமையாக மிகத்தீவிரமாக செயல்பட்டவரும், அக்காலப்பகுதியில் “எல்லைப் பாதுகாப்பை” நோக்கமாகக் கொண்டு, “காந்தீயம்” ஊடாக வன்னிக் குடியேற்றத்துக்காக அல்லும்பகலும் அயராது பாடுபட்ட சமயத்தில் காந்தீயத் தலைவர் டொக்ரர்.இராசசுந்தரம் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டவுடன் “தலைமறைவாக” வாழ்ந்த போதிலும், தனது கடமையை செவ்வனவே செய்தவர்.

பின்னர் அரசபடைகளால் இவர் தேடப்பட ஆரம்பித்தவுடன், இந்தியாவுக்கு தப்பிச்ச சென்று, புளொட் செயலதிபர் தோழர்.உமாமகேஸ்வரன் அவர்களுடன் ஏற்படட தொடர்பினால் “புளொட்” அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு இறுதிவரை புளொட் அமைப்பினதும், அதன் அரசியல் கட்சியினதும் வளர்ச்சிக்காக செயல்பட்டவரான திரு.சுப்பிரமணியம் சதானந்தம் (தோழர்.ஆனந்தியண்ணர்) அவர்களுக்கு எமது வீர அஞ்சலியைச் செலுத்தி நிக்கிறோம்.

அன்னாரின் பிரிவால் துயரிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், தோழர்களுடன் இணைந்து “தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய” (புளொட்) நாமும் இப்பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்ப்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + two =

*