;
Athirady Tamil News

கோலாகலமாக கொண்டாடப்பட்டது சுவிஸ்வாழ் திருமதி குகா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு.. (படங்கள்)

0

கோலாகலமாக கொண்டாடப்பட்டது சுவிஸ்வாழ் திருமதி குகா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு.. (படங்கள்)
#########################################

திரு.வேலாயுதம் அவர்களது மகளான சுவிஸ்வாழ் தமிழுறவான திருமதி குகா அவர்களின் பிறந்த நாளை இன்று தாயக கிராமமொன்றில் சிறுவர் சிறுமிகள் பெற்றோர்கள் ஒருங்கிணைப்பில் கொண்டாடப்பட்டது.

கொட்டும். மழையினைப் பொருட்படுத்தாது திருமதி குகா அவர்களது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர் பெரியோர்கள் பிறந்தநாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி தங்களின் பிறந்த நாள் சந்தோசத்தினை வெளிப்படுத்தினர். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது..

இம்மாதம் மூன்றாம் திகதி திருமதி குகா அவர்களின் மகனான செல்வன்.தர்சீஸ் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வினையும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே இன்றும். தனது மகனுடன் இணைந்து இன்றைய நாளில் தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி தமது பிறந்நநாளை கொண்டாடினார். இவர்களின் நிதிப் பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக “உலருணவுப் பொதிகள்” மிகவிரைவில் வழங்கப்பட உள்ளமையும், தற்போதைய மழைக்காலம் ஓரளவு தணிந்ததும் இவை வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் சுவிஸ் நாட்டில் பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி குகா அவர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும், தாயக உறவுகளோடு இணைந்து தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

அதேநேரம் இன்றைய நாளில் வாழ்வாதார உதவிகள். வழங்குவதற்கு நிதிப்பங்களிப்பினைத் தந்துதவிய திருமதி குகா அவர்களுக்கும் மாணிக்கதாசன் நன்றபணி மன்றத்தின் சார்பில் இனிய பிறந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

31.10.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.