;
Athirady Tamil News

“M.F” சஞ்சீவன் பிறந்தநாள் கொண்டாட்டம்.இயற்கை சூழலில் நடைபெற்றது.. (படங்கள்)

0

“M.F” சஞ்சீவன் பிறந்தநாள் கொண்டாட்டம்.இயற்கை சூழலில் நடைபெற்றது.. (படங்கள்)
#######################################################

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினரும், வவுனியா மாவட்ட பொறுப்பாளரும், சமூகசேவையாளருமான திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு எழில் கொஞ்சும் இயற்கை சூழலில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.

இன்று (31.12.2021) பிறந்த நாளைக் கொண்டாடும் சஞ்சீவன் அவர்கள் அவர் வாழுமூரான சிதம்பரபுரம் கிராமத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடகவும் சமூகப்பணிகளில் தன்னார்வத்துடன் செயற்பட்டு அம்மன்றத்தின் நிர்வாக சபையில் முக்கியமான பொறுப்பினையும் செய்து வருகின்றார்.

அவ்வாறான சமூக சேவையாளனான சஞ்சீவன் அவர்களது பிறந்த நாள் நேற்று அவரது வீட்டுக்கு அருகே “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால்” மிக எளிமையாக கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப் பாடி. கொண்டாடப்பட்டது. கிராமத்து உறவுகள் கலந்து சிறப்பித்தனர். அவர்களுக்கு கேக் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டு உறவுகள் சஞ்சீவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்.

திரு. பெருமாள் சஞ்சீவனுக்கு மாணிக்கதாசன் நற்பணிமன்றத்தின் ஒருங்கிணைப்பு இயக்குனர், சர்வதேச இணைப்பாளர்,.இயக்குனர் சபை உறுப்பினர்கல், தலைவர், செயலாளர், நிர்வாகசபை உறுப்பினர்களுடன் இணைந்து தாயக உறவுகள் ஆகியோர் தத்தமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

31.12.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.