;
Athirady Tamil News

கனடாவில் வீதி விபத்தில் அமரத்துவமான புங்குடுதீவு ஹரனின் நினைவாக வாழ்வாதார உதவியாக பசு வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

கனடாவில் வீதி விபத்தில் அமரத்துவமான புங்குடுதீவு ஹரனின் நினைவாக வாழ்வாதார உதவியாக பசு வழங்கல்.. (படங்கள், வீடியோ)
########################################

யாழ் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் கனடாவில் வசிப்பவர்களுமான திரு.திருமதி மோகன் தம்பதிகளின் செல்வப் புதல்வனுமாகிய அமரர் ஹரன் அவர்களது 31 ஆம் நாள் நினவு 30.12.2021 வியாழக்கிழமை மதியம் தாயக கிராமமான கணேசபுரம் பிள்ளையார் ஆலயத்தின் சுற்றாடலில் விசேட ஆத்மசாந்தி பூசையுடன் மதிய உணவு வழங்கப்பட்டு அன்னாரின் நினைவு கூறப்பட்டது நீங்கள் அறிந்ததே..

புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்டு கனடாவில் அமரத்துவமடைந்த தம்பதிகளின் செல்வப் புதல்வன் அண்மையில் கனடா நாட்டில் மிக மோசமான வீதி விபத்தில் அகாலமரணமடைந்தார்.

அதேவேளை அன்னாரின் நினைவாக அவரது பெரிய தந்தையான சுவிஸ் நாட்டில் வசிக்கும் லுக்ஸ் அண்ணர் என எல்லோராலும் அழைக்கப்படும் தமிழ்த் தேசிய பற்றாளராகிய திரு.திருமதி இலக்ஸ்மணன் லலிதா தம்பதிகளின் பிள்ளைகளும் அமரத்துவமடைந்த மதிகரனின் உடன்பிறவா சகோதர்களுமான செல்வி லாவண்யா, செல்வி லக்ஸனா, செல்வன் லவன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் சிதம்பரபுரம் கற்குளம் வவுனியா எனும் முகவரில் இருதய நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவரோடும், இடுப்புக்கு கீழே இயங்க முடியாதிருக்கும் செல்வி தாரணி என்ற பத்து வயது மகளோடு வசிக்கும் திருமதி. யோகேஸ்வரி ராஜ்குமார் என்பவருக்கு வாழ்வாதார உதவியாக சினைப்பட்ட பசு மாடு இன்றைய நாளில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

அமரர் ஹரன் அவர்களது 31 ஆம் நாள் நினவாக 30.12.2021 வியாழக்கிழமை மதியம் தாயக கிராமமான கணேசபுரம் பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பூசையுடன் மதிய உணவு வழங்கப்பட்டு அன்னாரின் நினைவு கூறப்பட்ட அதேவேளை அமரர் மதிகரன் அவரது இறுதி யாத்திரையின் போதும் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அன்னாரின் 31 ஆம் ஆத்மசாந்தி நினைவாக கற்குளம் கிராமத்தில் உள்ள நாகம்மாள் ஆலயத்தில் அந்தண சிவாச்சாரியார் அவர்களினால் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு ஆத்மசாந்தி பூசை நடாத்தப்பட்டு கோமாதா பூசை இடம்பெற்று சினைப்பட்ட பசு மாடு கையளிக்கப்பட்டது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிர்வாக சபை உறுப்பினரும், வவுனியா மாவட்ட அமைப்பாளருமான திரு பெருமாள் சஞ்சீவன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலவரா் திரு குமணன் அவர்களும், திருமதி வனிதா கிருபாகரன், திருமதி லதா ஆகியோருடன் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினரும் மாவட்ட அமைப்பாளருமான திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுகளுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை புங்குடுதீவை சேர்ந்தவர்களும், சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் கோனிக்ஸ் என்னுமிடத்தில் வதியும் லுக்ஸ் அண்ணர் என அழைக்கப்படும் திரு.திருமதி இலக்ஷ்மணன் லலிதா தம்பதிகளின் பிள்ளைகளும், அமரர் ஹரனின் உடன்பிறவா சகோதரங்களுமான செல்வி.லாவண்யா, செல்வி.லக்சனா, செல்வன்.லவன் ஆகியோர் வழங்கி இருந்தனர்.

இவ்வாறாக பல்வேறு சமூக நற்பணிகளை தாயக உறவுகளுக்கு வழங்கி தமது உடன்பிறவா சகோதரரான அமரர் ஹரன் அவர்களின் முப்பத்தியோராம் நாளை அன்னாரது உறவுகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அனுஸ்டித்தனர்.

அமரர் ஹரன் அவர்களின் ஆத்மசாந்திக்காக தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறது.

இதேவேளை வாழ்வாதார உதவிகளை வழங்கிய அமரர் ஹரன் அவர்களின் உடன்பிறவா சகோதரர்களுக்கு நன்றியினையும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

07.01.2022

கனடாவில் வீதி விபத்தில் அமரத்துவமான புங்குடுதீவு ஹரனின் நினைவாக வாழ்வாதார உதவியாக பசு வழங்கல்.. (வீடியோ)

கனடா வீதிவிபத்து; புங்குடுதீவு அமரர்.ஹரனின் 31ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வு, வாழ்வாதார உதவிகளுடன்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.