;
Athirady Tamil News

சுவிஸ் ரமணன் அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் ரமணன் அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.. (படங்கள், வீடியோ)
#####\#####################

வவுனியாவில் வாழ்ந்தவரும். தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை அதனூடாக தாயக உறவுகளுக்கு பல்வேறு சமூகப்பணிகளை முன் எடுத்து வரும் மாணிக்கதாசன் நற்பணிமன்றத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ரமணன் அவர்களது பிறந்தநாள் இன்றாகும்.

திரு.ரமணன் அவர்களது பிறந்தநாளை அவர் தாயகத்தில் விடுதலைப் பயணத்தில் பயணித்த காலத்தில், அவரது தோழர்களினால் வவுனியாவில் உருவாக்கிய பல்வேறு கிராமங்களில் ஒன்றான சிதம்பரபுரம் கிராமத்தில் அவரோடு வாழ்ந்த, பழகிய, உறவாடிய உறவுகளோடும், அவர்களின் குழந்தைகளோடும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பெருமளவான தாயக சிறுவர் சிறுமிகளோடு பெற்றோர்களும் கலந்து கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டி பாட்டுப்பாடி தமது மகிழ்ச்சியினையும் பிறந்தநாள் வாழ்த்தினையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தெரிவித்துக் கொண்டனர்.

திரு. ரமணன் அவர்களது பிறந்த நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது தற்செயலாக திரு.ரமணன் அவரது தோழர்களோடு நன்கு பழகிய மாஸ்டர் இல்லத்தில் ஒழுங்குபடுத்தி கொண்டாடப்பட்டது சிறப்பாகும். தோழர்களோடு பழகிய பழைய நினைவுகளை மாஸ்டர் அவர்களை நினைவூட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் தொடக்குனர்களின் ஒருவரான சுவிஸ் ரமணன் அவர்களது பிறந்த நாள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்வேளையில் திரு. ரமணன் அவர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிறைவேற்று இயக்குனர், இயக்குனர் சபை உறுப்பினர்கள், தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தாயக உறவுகள் அனைவரும் தங்களது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வானது முற்றுமுழுதாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஒழுங்கு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

18.01.2022

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாகசபை உறுப்பினர் சுவிஸ்ரமணனின் “பிறந்தநாள்” நிகழ்வு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.