;
Athirady Tamil News

அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாள் “கல்விக்கு கரம் கொடுப்போம்” சிறப்பான பொங்கல் நிகழ்வு, கோலாகலமாக கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

0

அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாள் நிகழ்வு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” கோலாகலமாக கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
#################################

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவரும். அதன் இராணுவப் பிரிவின் தளபதியுமான அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வானது பெரும் எடுப்பில் மிக கோலாகலமாக் கொண்டாடப்பட்டது.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாகக்குழு உறுப்பினர்களின் முழுமையான நிதிப் பங்களிப்பில், வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் எனும் கிராமத்தில ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை ஆதரவில், பொதுநோக்கு மண்டபத்தில் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் அயல் கிராமத்து பாடசாலை மாணவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட பலதரப்பட்ட மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள், விளையாட்டுக்கழக வீரர்கள் என பெருந்தொகையான தாயக உறவுகள் கலந்து கொண்டு “பொங்கல்” பொங்கி, அமரர் மாணிக்கதாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செயலாளர் திரு.மாணிக்கம் ஜெகன், வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.சஞ்சீவன் ஆகியோர் முன்னிலை வகிக்க, நிர்வாகசபை உறுப்பினர் திருமதி.பவளராணி நவரத்தினம் அவர்களின் ஏற்பாட்டில், இன்று காலை 10 மணியளவில் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் தலைவர் கௌரவ தர்மலிங்கம் யோகராசா அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமான மகேந்திரன் ராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

காலை 10 மணியளவில் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் பாலாமைக்கல் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் போசகர் திரு குணரத்தினம் குணம் அவர்களும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், சமூக சேவையாளருமான திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களும், மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினர் திருமதி.நவம் பவளராணி மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியை திருமதி, சிவரஞ்சினி, நடன ஆசிரியை சாந்தினி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

அமரர் மாணிக்கதாசன் அவர்களின் மக்கள் விடுதலைக்கான மகத்தான பணிகளையும், இந்த மண்ணை பாதுகாப்பதற்கு எவ்வாறான பணிகளை முன்னெடுத்தார் என்பதனையும் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அவர்களும், தோழர் மகேந்திரன் ராஜா அவர்களும் தெரிவித்தனர்.

“குறிப்பாக வவுனியா முச்சந்திகளில் உள்ள தமிழ்ப் பெரியார்களின் திருவுருவச் சிலைகள் தொடக்கம் எல்லையோர பாதுகாப்பை முன்னிட்டு தமிழர் குடியேற்றங்கள், மாதிரிக் கிராமங்கள், கோட்டங்கள் அமைத்தது, வவுனியா பொது வாசிகசாலை என நீண்டு கொண்டு போகும் “அமரர்.மாணிக்கதாசன்” அவர்களின், மக்களுக்கான அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றியும்” எடுத்துரைத்தனர்.

நிறைவாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக அறநெறி பாடசாலை மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட விசேட அழைப்பாளர்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு பிறந்த நாள் சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டு இனிதாக கோலாகலமாக அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாள் நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.

மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில், கலந்து கொண்ட அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் “பொங்கல், பால்சோறு (கிரிபத்), வடை, கடலை, மோதகம், இனிப்புவகைகள்” என பல்வேறு விருந்தும் பரிமாறப்பட்டது. இவற்றுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாகசபை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வானது முற்றுமுழுதாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில், அதன் இயக்குனர் சுவிஸ் ரஞ்சன் அண்ணன் அவர்களது மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்வாகும். அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் மிகவும் பாரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வாகும்,
ஏனெனில் அன்னாரின் பிறந்த தினத்தில் தொடங்கப்பட்ட “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் தொடக்க நாளும்” இன்றாகும். கொரோனா சூழ்நிலையால் இம்முறை கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்வு எதிர்வரும் ஆண்டுகளில் மிகப் பெருமெடுப்பில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

18.01.2022

அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாள், “கல்விக்கு கரம் கொடுப்போம்” சிறப்பான பொங்கல் நிகழ்வு.. (பகுதி-1)

அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாள், “கல்விக்கு கரம் கொடுப்போம்” சிறப்பான பொங்கல் நிகழ்வு.. (பகுதி-2)


“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.