;
Athirady Tamil News

பிரான்ஸ் பாபுஜியின் பிறந்ததின நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

பிரான்ஸ் பாபுஜியின் பிறந்ததின நிகழ்வு.. படங்கள், வீடியோ)

யாழ். புங்குடுதீவை சேர்ந்தவரும், பிரான்சில் வசிக்கும் செல்வன். பாபுஜி அவர்களின் பிறந்ததினம் இன்று தாயக கிராமமொன்றில் முதியோர், இளையோருடன் கொண்டாடப்பட்டது.. இவர் புங்குடுதீவை சேர்ந்தவர்களும், லண்டனில் அமரத்துவமடைந்த சொக்கலிங்கம், நாகேஷ் தம்பதிகளின் பேரனும், அவர்களின் இரண்டாவது புதல்வியான, திரு.திருமதி.சஸ்பாநிதி ஜெயக்குமாரி தம்பதிகளின் ஏகபுதல்வனும் ஆவார்.

இன்று தாயகம் வவுனியா பாலாமைக்கல் எனும் கிராமத்தில் சமுர்த்திப் பயனாளிகளின் பங்குபற்றலோடு பொதுநோக்கு மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

செல்வன் பாபுஜி அவர்களின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு குறிப்பாக கொரோனா காலத்து பயணத்தடை காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கிப் போயிருந்த சூழ்நிலையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக பல்வேறு சமூகநலப் பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

செல்வன் பாபுஜி அவர்களின் இன்றைய பிறந்ததினத்தில் அவர் சகல செல்வங்களுடனும், நீடூழி காலம் வாழ்கவென தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் மனதார வாழ்த்துகின்றது. நிதிப் பங்களிப்பு வழங்கிய அவரது குடும்பத்தினருக்கும் நன்றிகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

29.01.2022

பிரான்ஸ் புங்குடுதீவு பாபுஜியின் பிறந்ததின நிகழ்வு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.