;
Athirady Tamil News

கனடா அமரர் செந்தூரன் அவர்களின் 31 ஆம்நாள் அந்தியேட்டி நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

கனடா அமரர் செந்தூரன் அவர்களின் 31 ஆம்நாள் அந்தியேட்டி நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
######################

யாழ் அனலைதீவை பூர்வீகமாக கொண்டு கனடாவில் வசித்து வந்தவேளை அமரத்துவமடைந்த அமரர்.திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்களின் 31 ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் வவுனியா நெளுக்குளம், சாம்பல் தோட்ம் பிள்ளையார் ஆலயத்தில் அநேக பொதுமக்கள் மத்தியில் விசேட ஆத்மசாந்தி பூசையுடன் ஆரம்பமாகி, நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் மதியஉணவு வழங்கப்பட்டது.

கடந்த மாதம் 01.01.2022 அன்று கனடாவில் இறைபதம் அடைந்த அனலைதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவாக, சாம்பல் தோட்டம் பிள்ளையா் ஆலயத்தில் அவரின் நண்பர்களினால் யாழ். அனலைதீவை சேர்ந்தவரான அமரர் திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

அந்தியேட்டி நிகழ்வுக்கு கிராம மக்கள் அதிகமானோர் கலந்து அமரர் செந்தூரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டு தேவாரபாராயணம் பாடப்பட்டு அந்தியேட்டிக் கிரியைகள் நிறைவு பெற்றதுடன், நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் பிள்ளையார் கோயில் பிரகாரகத்துக்குள் மதிய உணவு வழங்கப்பட்டது.

அமரத்துவமடைந்த அமரர்.செந்தூரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் செந்தூரன் அவர்களது 31 ஆம் நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, 31 ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது நண்பர்கள் உறவினர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

31.01.2022

கனடா அமரர் செந்தூரன் அவர்களின் 31 ஆம்நாள் அந்தியேட்டி நிகழ்வு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.