;
Athirady Tamil News

“சுவிஸ் சுதா செல்வி” திருமண நாளும், தாயக உறவுகளின் வாழ்த்துக்களும்.. (படங்கள், வீடியோ)

0

“சுவிஸ் சுதா செல்வி” திருமண நாளும், தாயக உறவுகளின் வாழ்த்துக்களும்.. (படங்கள், வீடியோ)
#####################################

யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி சுதாகரன் கிருபாதேவி (செல்வி) தம்பதிகளின் திருமண நிறைவாண்டு விழாவினை தாயக உறவுகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திரு.திருமதி சுதா செல்வி தம்பதிகள் தங்களின் குடும்பத்தின் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு கடந்த வருடங்களாக பல்வேறு உதவி செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தாங்கள் வாழும் தேசத்திலே பல்வேறு சமூகநல அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தன்னார்வத் தொண்டுகளையும், சமயத் தொண்டுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற திரு.திருமதி. “சுதா செல்வி” தம்பதிகளின் திருமண நாளான இன்று வவுனியா பாலாமைக்கல் எனும் கிராமத்தில் தாயக உறவுகளின் ஒன்றுகூடலில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒருங்கிணைப்பில் “சுதா செல்வி” அவர்களின் திருமண நிறைவு நாள் கேக் வெட்டி, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி திருமண மங்கல நன்னாள் வாழ்த்துக்கள் கூறி இனிதாக கொண்டாடப்பட்டது.

சிறுவர்களர் பெரியோர்கள் என பலரும் கூடி “சுவிஸ் சுதா செல்வி” தம்பதிகளின் திருமண நாள் கொண்டாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

எதிர்வரும் 12.02.2022 அன்று சுதா செல்வி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் ஆதி அவர்களின் பிறந்த நாளில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கு கரம்கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பலவேறு உதவிகள் தாயக உறவுகளுக்கு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் இனிதான திருமண மங்கல நாளினை கொண்டாடும் சுவிஸ் சுதா செல்வி தம்பதிகளை தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்துவதோடு, அவர்களின் நிதிப்பங்களிப்பில் நடைபெறும் சமூகநல திட்டங்களுக்காகவும் வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்கின்றோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

05.02.2022

“சுவிஸ் சுதா செல்வி” திருமண நாளும், தாயக உறவுகளின் வாழ்த்துக்களும்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

சுவிஸ் சுதாகரன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.