;
Athirady Tamil News

புளொட் தோழர்களின் நிதிப் பங்களிப்பில், மன்னார் வட்டக்கண்டலில் “கற்றல் உபகரணங்கள்” வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி “புளொட்” செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, அறநெறி பாடசாலை மாணவரகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.. (படங்கள்)
######################################

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியும், மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், அதன் செயலதிபருமான தோழர் முகுந்தன் என அழைக்கப்படும் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களது எழுபத்தேழாவது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் வட்டக்கண்டல் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு, புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்” மன்னார் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளரும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” மன்னார் மாவட்ட செயற்பாட்டாளருமான தோழர் ஜேம்ஸ் அவர்களது ஒருங்கிணைப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வழங்கப்பட்டது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் ஸ்தாபகரும், தலைவருமான அமரர் தோழர் திரு உமாமகேஸ்வரன் அவர்களின் “ஜனன தினத்தினை” முன்னிட்டு மன்னார் மாவட்டத்தின் வட்டக்கண்டல் வட்டாரத்திலுள்ள அறநெறி பாடசாலையின் 01ம் ஆண்டு தொடக்கம் 05ம் ஆண்டு வரையிலுமுள்ள தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த 29 மாணவச் செல்வங்களுக்கு “புலம்பெயர்ந்து வாழும் புளொட் தோழர்கள்” சிலரின் நிதிப் பங்களிப்பில், கற்றல் உபகரணங்கள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியை திருமதி மகேந்திரன் கௌரியம்மா, ஆசிரியை செல்வி முத்துககுமார் நிஷாந்தினி, பாலைப்பெருமாள்கட்டு மாதர்கிராம அபிவிருத்திச் சங்க தலைவி திருமதி அரிகலா வஸிகரன், வட்டக்கண்டல் பிள்ளையார் கோவில் நிர்வாகி திரு S.கருணாகரன் இவர்களுடன் 20க்கும் மேற்ப்பட்ட மாணவச் செல்வங்களின் பெற்றொர்களும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், மன்னார் மாவட்ட செயற்பாட்டாளர் தோழர்.ஜேம்ஸ் அவர்களும் கலந்து கொண்டு அறநெறி பாடசாலை மாணவமாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வுக்கு அறநெறி பாடசாலை மாணவர்களோடு பெற்றோர்களும் கிராமிய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அமரர். தோழர் உமாமகேஸ்வரன் அவர்களது எழுபத்தேழாவது பிறந்தநாள் நிகழ்வுகள் இனிவரும் நாட்களில் தாயகப் பகுதியெங்கும் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அறநெறி ஆசிரியைகள் ஆகியோருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு, மறைந்த மக்கள் போராட்டதின் மகத்தான தளபதிக்கு வீரஅஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

§§§§§§§§§§§§§§§§
புலம்பெயர்ந்து வாழும் புளொட் இயக்கத்தின் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் “கற்றல் உபகரணங்கள்” வழங்கப்பட்டது.

§§§ நிதிப் பங்களித்தோர் விபரம் §§§

வவுனியாவைச் சேர்ந்தவரும், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாக சபை உறுப்பினரும், புளொட் அமெரிக்கக் கிளையின் பொறுப்பாளருமான தோழர்.கோபி; வவுனியாவைச் சேர்ந்தவரும், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாக சபை உறுப்பினரும், சுவிஸ் ரப்பேர்ஸ்விலில் வசிப்பவருமான புளொட் சுவிஸ் கிளைத் தோழர்.ரமணன் எனும் றுஷாந்த்;

கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களான..-யாழ். வசாவிளானைச் சேர்ந்தவரும், சுவிஸ் கிளாரசில் வசிப்பவருமான தோழர்.தேவண்ணர் எனும் செல்லத்துரை தவராஜா; யாழ்.வீமன்காமம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும், சுவிஸ் செங்காலனில் வசிப்பவருமான தோழர்.அசோக் எனும் அசோகராஜா; வன்னியைச் சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.பிரபா எனும் கருணாகரன், யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.பாபு எனும் சித்திரவேல்;

யாழ்.புங்குடுதீவை சேர்ந்தவரும், சுவிஸ் பேர்ண் ஒபேர்புர்க்கில் வசிப்பவருமான தோழர்.குமார் எனும் கிருஷ்ணகுமார்; யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான தோழர்.சிவா எனும் அம்பிகாபதி கலைச்செல்வம்; வவுனியாவைச் சேர்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான தோழர்.தயா எனும் கந்தவேலு தயாபரன்; யாழ்.புங்குடுதீவை சேர்ந்தவரும், சுவிஸ் பேர்ண் ரூபனக்த்தில் வசிப்பவருமான தோழர்.குழந்தை எனும் கைலாசநாதன்,

யாழ். கல்வியங்காட்டை சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.அன்ரன் எனும் “பரிசுத்த மூப்பர் பிலிப்” ஆகிய திரு.லோகராஜா; யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சார்கன்ஸில் வசிப்பவருமான தோழர்.மோகன் எனும் பற்பநாதன் அருட்சோதி; யாழ்.சாவகச்சேரியைச் சேர்ந்தவரும், சுவிஸ் சொலத்தூணில் வசிப்பவருமான தோழர் லெனின் எனும் செல்வபாலன், திருகோணமலை சம்பூரைச் சேர்ந்தவரும் சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.புவி; புங்குடுதீவை சேர்ந்த புளொட் தோழர் சுவிஸ்ரஞ்சன்; ஆகியோர் நிதிப் பங்களிப்பை வழங்கி இச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டமானது, புளொட் உபதலைவர் அமரர் மாணிக்கதாசனின் ஜனனதினமான ஜனவரி 14 முதல், புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் ஜனனதினம் (பிப்ரவரி 18) வரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

08.02.2022

புளொட் தோழர்களின் நிதிப் பங்களிப்பில், மன்னார் வட்டக்கண்டலில் “கற்றல் உபகரணங்கள்” வழங்கும் நிகழ்வு.. (வீடியோ)

புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் பிறந்ததினம்.. 18.02.1945 PLOTE Leader UMAMAKESWARAN B.Day.. (வீடியோ)


“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.