;
Athirady Tamil News

லண்டன் “கண்ணன் ஆனந்தி” தம்பதிகளின் திருமண நிறைவு நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

0

லண்டன் “கண்ணன் ஆனந்தி” தம்பதிகளின் திருமண நிறைவு நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
#########################################

புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு பிரபல வர்த்தகருமான சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஸ்) தம்பதிகளின் தலைமகனும், லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாக சபைத் தலைவரும், சிறந்த சமூகசேவகருமான கண்ணன் அண்ணன் என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி. கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் திருமண நிறைவு நாள் தாயக உறவுகளினால் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒருங்கிணைப்பில் வவுனியா அமைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களது நேர்த்தியான ஒழுங்கமைப்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

யாழ். புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும், லண்டனில் வசிப்பவர்களுமான திரு.திருமதி கண்ணன் ஆனந்தி தம்பதிகளின் திருமண நாள் இன்றாகும் . இவர்களுடைய திருமண நிறைவுநாளினை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தாயக கிராமத்தில் சிறுவர்கள், பெரியோர்கள் ஒன்றிணைவில் திருமண நிறைவு நாள் கேக் வெட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டாடப்பட்டது.

திரு.திருமதி கண்ணன் ஆனந்தி தம்பதிகளின் திருமண நிறைவாண்டு விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. அத்தோடு தம்பதிகளுக்கு திருமணநாள் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக உறவுகளோடு திருமண நிறைவினைக் கொண்டாடும் திரு.திருமதி. கண்ணன் ஆனந்தி தம்பதிகளுக்கு நிறைவான திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

10.02.2022

லண்டன் “கண்ணன் ஆனந்தி” தம்பதிகளின் திருமண நிறைவு நாள் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.