;
Athirady Tamil News

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின், பதினெட்டாவது பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
################################

யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி சுதாகரன் கிருபாதேவி (செல்வி) தம்பதிகளின் செல்வப் புதல்வன் செல்வன்.ஆதி அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் விழாவினை தாயக உறவுகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திரு.திருமதி சுதா செல்வி தம்பதிகள் தங்களின் குடும்பத்தின் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” தாயக உறவுகளுக்கு கடந்த பல வருடங்களாக உதவி செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தாங்கள் வாழும் தேசத்திலே பல்வேறு சமய, சமூகநல அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தன்னார்வத் தொண்டுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற சுவிஸ் வாழ் திரு.திருமதி. சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன்.ஆதியின் பதினெட்டாவது பிறந்தநாள் நிகழ்வினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒருங்கிணைப்பில் செல்வன்-ஆதி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம், கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப்பாடி கிராமத்தின் அநேக சிறுவர்கள் ஒன்றுகூடி கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி இனிதாக கொண்டாடினர்கள். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் செல்வன்.ஆதியின் பிறந்த நாள் கேக் வழங்கப்பட்டது

சுவிஸ் சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன் ஆதி அவர்களின் பிறந்தநாளில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பலவேறு உதவிகள் தாயக உறவுகளுக்கு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நாளில் பல்வேறு நிலைகளில் நலிவுற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு செல்வன்.ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக பெறுமதிமிக்க உலருணவுப் பொதிகள் பதினெட்டுக் குடும்பங்களுக்கு வழங்கி வைக்க மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் ஏற்பாடு செய்திருந்த போதும் தீடீரென பெய்த மழை காரணமாக வழங்கி வைக்க முடியாமல் போனது.. இருப்பினும் அவற்றை விரைவில் வழங்கி வைக்கப்படும் என “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தெரிவித்துள்ளார்

இன்றைய நாளில் இனிதான பிறந்தநாளினை கொண்டாடும் சுவிஸ் சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன்.ஆதியின் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்துவதோடு அவர்களின் நிதிப்பங்களிப்பில் நடைபெறும் சமூகநல திட்டங்கள் மேலும் தொடரவும், பல்கிப் பெருகவும் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

12.02.2022

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.