;
Athirady Tamil News

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-1) -படங்கள் வீடியோ-

0

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-1) -படங்கள் வீடியோ-

மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் எழுச்சிமிகு கொண்டாட்டம்.. (படங்கள்) பகுதி -1
########################################

ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், மாபெரும் மக்கள் சேனையான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும், அதன் செயலதிபருமான மக்கள் போராட்டத்தின் மாபெரும் தளபதியான தோழர் முகுந்தன் என அறியப்பட்ட அமரர் கதிர்காமர உமாமகேஸ்வரன் அவர்களது எழுபத்தேழாவது பிறந்த நாள் நினைவு தாயகத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் பல்வேறு கிராமமட்ட பொது அமைப்புக்களின் இணைவில் எழுச்சிமிகு மக்கள் அலையில மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

வவுனியா கற்குளம் படிவம் நான்கில் விசேடமாக அமைக்கப்பட்ட பொது மண்டபத்தில் பலநூற்றுக்கனக்கான மக்கள் பெரு வெள்ளத்தில் பல்வேறு கலை நடனம் மற்றும் நினைவுரைகளுடன் நிகழ்வில பங்கேற்ற பாடசாலை மாணவ மாணவர்களுக்கு கற்றல உபகரணங்கள், வயோதிபர்களுக்கான உலருணவுப் பொதிகளுடன் ஏனைய பங்கு பற்றுனர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு அமரர் தோழர்.உமாமகேஸ்வரன் அவர்களது எழுபத்தேழாவது பிறந்ததினம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு பெருமாள் சஞ்சீவன் அவர்களது மேற்பார்வையில் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், முன்பள்ளி கட்டமைப்பு, நாகம்மாள் ஆலய பரிபாலன சபை மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” பெருந்தலைவர் முன்னாள் அதிபர், சமாதான நீதவான், புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர், சமூக சேவையாளர் திரு.எஸ்.கே சண்முகலிங்கம் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.சுப்பையா ஜெகதீஸ்வரன் என்ற தோழர் சிவம் அவர்களும்,.வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின்கௌரவ தலைவர் திரு. தர்மலிங்கம் யோகராசா எனும் தோழர் யோகன் அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினரும், வவுனியா தமிழ்தெற்கு தமிழ்பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான தோழர் குகன் அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினர் மற்றும் கிளிநொச்சி மாவடடப் பொறுப்பாளர் மகேந்திரன் எனும் தோழர். ராஜா அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மன்னார் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளரும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” மன்னார் இணைப்பாளர் தோழர் ஜேம்ஸ் அவர்களும், தளபதி அமரர். மாணிக்கதாசன் அவர்களின் நெருங்கிய சகாக்களில் ஒருவரும், செயலதிபர் அமரர். உமாமகேஸ்வரன் அவர்களின் துயிலும் இல்ல செயற்பாட்டாளருமான தோழர்.கண்ணாடி சிவா அவர்களும், கலந்து கொண்டதுடன்..

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் கனடா நாட்டிலிருந்து வருகை தந்துள்ள மன்றத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் சமூக சேவையாளருமான திரு குணராஜா உதயராஜா என்ற திரு.உதயன் அவர்களும், மன்றத்தின் பொருளாளர் செல்வி. றம்யா செல்வராஜா அவர்களும், மன்றத்தின் செயற்பாட்டாளரும் வவுனியா கல்வி வலய சேவைக்கால ஆங்கில ஆலோசகருமான செல்வி ஜெகநந்தினி முத்துக்குமார் அவர்களும், மன்றத்தின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களும், மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினர் திருமதி நவரட்ணம் பவளராணி அவர்களும், திருமதி சுஜி அவர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வின் தொடக்கத்தில் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டு பூவிழி முன்பள்ளி ஆசிரியை திருமதி.திவாகலனி சிவச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் தலைவர் தலைமையுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து விருந்தினர் உரையும் கலை நிகழ்வும் இடம் பெற்றது.

அதன் பின்னர் சிறப்பு நிகழ்வாக அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு அவரோடு வாழ்ந்த தோழர்களுடன் மக்களும் இணைந்து வாழ்த்துக்களுடன் நினைவு கூர்ந்தனர். இதனைத் தொடர்ந்து அனைவருக்குமான மதிய உணவு வழங்கப்பட்டது.

மதிய உணவு வழங்களைத் தொடர்ந்து வயோதிபர்களுக்கான உலருணவுப் பொதிகள் விசேட அழைப்பாளர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனின் எழுபத்தேழாவது பிறந்ததினத்தை முன்னிட்டு எழுபத்தேழு உயர்தர மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுடன் நூற்றிஇருபதுக்கும் மேற்படட மாணவ மாணவிகளுக்கான அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் முடிவாக புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனின் எழுபத்தேழாவது பிறந்ததினத்தை முன்னிட்டு எழுபத்தேழு உயர்தர மரக்கன்றுகளுடன், கலந்து கொண்ட கிராம மக்களுக்கு பயன்தரு மரங்கள் அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது. முடிவாக நன்றியுரையுடன் அமரர் தோழர் உமா மகேஸ்வரன் அவர்களது எழுபத்தேழாவது பிறந்ததின நினைவானது மக்கள் எழுச்சியின் ஆதரவோடு மகிழ்வாக நடந்தேறியது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

16.02.2022

கொட்டும் பலத்த மழைக்கு மத்தியிலும், பல நூற்றுக்கணக்கான மக்களின் பங்களிப்பில், வவுனியாவில் “புளொட்” செயலதிபரின் பிறந்தநாள் நிகழ்வு.. “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஏற்பாட்டில்.. (பகுதி- 1) -வீடியோ-
§§§ விருந்தினர்கள் வரவேற்பு, வரவேற்புரை, தலைமையுரை, வரவேற்பு நடனம்.. §§§

கொட்டும் பலத்த மழைக்கு மத்தியிலும், பல நூற்றுக்கணக்கான மக்களின் பங்களிப்பில், வவுனியாவில் “புளொட்” செயலதிபரின் பிறந்தநாள் நிகழ்வு.. “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஏற்பாட்டில்.. (பகுதி- 2) -வீடியோ-
§§§ விருந்தினர்கள் உரை, கலை நிகழ்வுகள், நடனம்.. §§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.