;
Athirady Tamil News

கனடா வாழ் புங்குடுதீவு “ராஜா, ரதீஸ்” திருமண நாளை முன்னிட்டு புத்தாடை வழங்கல்.. (படங்கள் & வீடியோ)

0

மட்டக்களப்பு “சக்தி இல்ல” சிறுமிகளுக்கு, கனடா வாழ் புங்குடுதீவு “ராஜா, ரதீஸ்” திருமண நாளை முன்னிட்டு புத்தாடை வழங்கல்.. (படங்கள் & வீடியோ)
##############################

கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு, இன்றையதினம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் “புத்தாடைகள்” வழங்கி வைக்கப்பட்டது.

தாயகத்தில் யுத்தகாலத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் தற்போது பலதரப்பட்ட சவால்களுக்கு முகம் கொடுத்தவண்ணம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்லத்தில்” வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக அடிப்படைத் தேவைகளுக்கு மத்தியில் வாழும் இவர்களை இனங்கண்டு இவர்களுக்கு “ராஜா ரதீஸ் தம்பதிகளின்” திருமண நாளன்று பெறுமதியான புத்தாடைகள் வழங்கப்பட்டது..

முதலில் திருமண நாளைக் கொண்டாடும் கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளை வாழ்த்தி “திருமணநாள் கேக்” வெட்டி, மாணவிகளினால் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டதுடன், மேற்படி “சக்தி மகளிர்” இல்ல சிறுமிகள் சார்பில் நன்றியுரையுடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரமுகர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து “சக்தி மகளிர்” இல்ல சிறுமிகள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்குமான விசேட மதியஉணவு வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது மேற்படி “சக்தி மகளிர்” இல்ல தலமைப் பொறுப்பாளரும், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை (கொக்கட்டிச்சோலை) தவிசாளருமான திரு.புஷ்பலிங்கம் அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச தவிசாளர் திரு.சண்முகராஜா விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது. இவர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச உபதவிசாளரும், புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவர்களில் ஒருவருமான திரு.பொன் செல்லத்துரை (தோழர்.கேசவன்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

திருமண நாளைக் கொண்டாடும் மேற்படி கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளை “சக்தி மகளிர் இல்ல” சிறுமிகள், மற்றும் தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்தி சந்தோஷமடைவதுடன், நிதிப்பங்களிப்பு வழங்கிய கனடாவில் வசிக்கும் உதயராஜா ரதீஸ்வரி குடும்பத்துக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மணிக்கதாசன் நற்பணி மன்றம்
வவுனியா இலங்கை.

02.03.2022

மட்டக்களப்பு “சக்தி இல்ல” சிறுமிகளுக்கு, கனடா வாழ் புங்குடுதீவு “ராஜா ரதீஸ்” திருமண நாளை முன்னிட்டு புத்தாடை வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.