;
Athirady Tamil News

புங்குடுதீவு, கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

0

புங்குடுதீவு, கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
#########################

கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு பிரபல வர்த்தகருமான சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஸ்) தம்பதிகளின் புதல்வரான கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் வவுனியாவில் உள்ள கிராமம் ஒன்றில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மாவட்ட முக்கியஸ்தர் திருமதி.நவரெத்தினம் பவளராணி அவர்களது நேர்த்தியான ஒழுங்கமைப்பில் கோலாகலாமாக கொண்டாடப்பட்டது..

வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில் உள்ள “அருளாலயம் முன்பள்ளி”யில் அதன் ஆசிரியைகளான திருமதி.அ.இலோஜி, திருமதி.செ.இந்திரகுமாரி, அப்பிரதேச சமுர்த்தி தலைவி திருமதி.எஸ்.பகவதி, மாதர் சங்க தலைவி திருமதி.எஸ்.சிந்து ஆகியோருடன் அப்பள்ளியின் மாணவ,மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் ஒன்றுகூடி இவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக்வெட்டி கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் கனடா இந்திரன் புங்குடுதீவு பிரபல வர்த்தகர் சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது குடும்பத்தின் எந்தவிதமான நிகழ்வு என்றாலும் அந்நிகழ்வினை தாயக உறவுகளோடு இணைந்து கொண்டாடி உதவி செய்து வருபவர்கள் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவர்கள் பலவேறு வாழ்வாதார மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சி திட்டத்தினூடாக தொடர்ச்சியாக உதவி செய்து வருவது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவருக்கும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப்பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

02.03 2022.

புங்குடுதீவு, கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.