;
Athirady Tamil News

கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) பகுதி-2

0

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) பகுதி-2
§§§§§§§§§§§§§§§§

கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் ஏகபுதல்வனான செல்வன்.நிலவன் அவர்களின் இன்றைய பிறந்ததினம் “பாலாமைல்கல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள்” அறநெறிப் பாடசாலையில் சந்தோஷமாகக் கொண்டாடப்பட்ட்து.

இதன் முதல் நிகழ்வாக காலையில் “பாலாமைல்கல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள்” அறநெறிப் பாடசாலையில் மாணவ மாணவிகள், அவர்களின் உறவினர்கள் ஆகியோர் “செல்வன்.நிலவனின்” பிறந்தநாளை முன்னிட்டு கேக்வெட்டி, பிறந்தநாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

அத்துடன் அக்கிராமத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய அன்றாட கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு செல்வன்.நிலவனின் பிறந்தநாளை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு. பெருமாள் சஞ்சீவன், முக்கியஸ்தர் திருமதி.ந.பவளராணி ஆகியோரின் சிறப்பான ஒழுங்கமைப்பில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மதியம், சாம்பல்தோட்டம் இரண்டாம் வடடார அறநெறிப பாடசாலை மாணவர்களுக்கு கிரிபத்துடன் கூடிய சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன், செல்வன் நிலவனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கிராமத்தில் வாழும் வயோதிபர்கள் மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், விசேட தேவைக்குடையவர்கள் என பலதரப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டவர்கள் களில் குறிப்பிட்ட சிலருக்கான உலருணவுப் பொதியும் வழங்கப்பட்டது.

நிகழ்வுகளில் கலந்து கொண்டோரினால் இன்றைய நாளில் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வன் நிலவன் உதயராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினர் திருமதிபவளராணி அவர்கள் நேர்த்தியாக ஒழுங்கமைப்பைச் செய்துள்ளார்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன்.நிலவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தாயக உறவுகளோடு இணைந்து “மாணிக்கதாசன் நறபணி மன்றம்” தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினரால் மேற்படி நிகழ்வுகளுக்கு வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்புக்கும், மதிப்புடன் கூடிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

06.03 2022.

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ) பகுதி-2

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.