;
Athirady Tamil News

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
§§§§§§§§§§§§§§§§

கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான புங்குடுதீவைச் சேர்ந்த உதயன் அல்லது ராஜா என அன்புடன் அழைக்கப்படும், திரு.குணராஜா உதயராஜா அவர்களின் இன்றைய பிறந்ததினம் வவுனியா எல்லைக் கிராமமொன்றில் மிகவும் சந்தோஷமாகக் கொண்டாடப்பட்ட்து.

இதன் நிகழ்வாக பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட சுமார் நூறுபேருக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள், அவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோர் “திரு.உதயராஜாவின்” பிறந்தநாளை முன்னிட்டு கேக்வெட்டி, பிறந்தநாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில், மிக சிறப்பாக இந்நிகழ்வு நடந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், அக்கிராமத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய அன்றாட கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு திரு.உதயராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு. பெருமாள் சஞ்சீவன், அக்கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோரின் சிறப்பான ஒழுங்கமைப்பில் பயன்தரு தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், புங்குடுதீவை சேர்ந்தவரும், கனடாவில் வசிப்பவருமான “சமூக தொண்டன்” திரு.குணராஜா உதயராஜா அவர்களின் பிறந்ததினம் என்பதினால் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாக சபையின் நிதிப் பங்களிப்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வுகளில் கலந்து கொண்டோரினால் இன்றைய நாளில் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் திரு.உதயராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.உதயராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தாயக உறவுகளோடு இணைந்து “மாணிக்கதாசன் நறபணி மன்றம்” தெரிவித்துக் கொள்கிறது

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

10.03 2022.

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.