;
Athirady Tamil News

கனடா அமரர்.செல்வனின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

கனடா அமரர்.செல்வனின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவை சேர்ந்தவரும், கனடாவில் அமரத்துவமடைந்தவருமான செல்வன் என அன்புடன் அழைக்கப்படும் அமரர்.செல்லையா செல்வகுமார் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள்.. இன்றையதினம் காலை குழுமாட்டுச்சந்தி காளி கோவிலில் அவரது பெயரில் “மோட்ஷ அர்சசனை” நடத்தப்பட்டு, தானத்தட்டும் வழங்கப்பட்டு அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிப் பிரார்த்திக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்றுமதியம் பழைய கற்பகபுரம் கிராமத்தில் அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது. இதனை மாணிக்கதாசன் நற்பணி மன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி. நவரத்தினம் பவளராணி அவர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவனுடன் இணைந்து நேர்த்தியாக ஒழுங்கமைத்து நடத்தினார்.

வறுமைக்கோட்டுக்கு கீழே பெரும்பான்மையாக வாழும் அக்கிராம மக்கள், மாணவ, மாணவிகள், வயோதிபர்களெனப் பெருமளவில் மக்கள் கலந்து இருந்தனர். இதன் காரணமாக மூன்று தேவைக்கு மேலாக பந்தி வைக்கப்பட்டு கலந்து கொண்டு இருந்த அனைத்து மக்களும் வயிறார சாப்பிடும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளில் அக்கிராம சமூக சேவகர்களை, பெரியோரும் உதவி இருந்தனர்.

அத்துடன் கலந்து கொண்ட அனைத்து மக்களினாலும் அமரர்.செல்வனின் ஆத்மா சாந்தியடைய வேண்டிப் பிரார்த்தித்ததுடன் நன்றிகளையும் தெரிவித்தனர். அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட சிலரினால் தமது நிலையை “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறி, வாழ்வாதார உதவிக்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

அமரத்துவமடைந்த அமரர்.செல்லையா செல்வகுமார் அவர்களுக்கு தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் செல்வகுமார் அவர்களது பதினேழாம் ஆண்டு நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்ட, நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

10.03 2022.

கனடா அமரர்.செல்வனின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.