;
Athirady Tamil News

மாணிக்கதாசன் நற்பணி மன்ற நிதி அனுசரணையுடன், யாழ்ப்பாணம் கொக்குவில் பாலர் பாடசாலை விளையாட்டு நிகழ்வு..!!

0

மாணிக்கதாசன் நற்பணி மன்ற நிதி அனுசரணையுடன், யாழ்ப்பாணம் கொக்குவில் பாலர் பாடசாலை விளையாட்டு நிகழ்வு..!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் கொக்குவில் பிடாரி அம்பாள் ஆலய பாடசாலையின் 2022ஆம் ஆண்டு புதுவருட விளையாட்டு நிகழ்வு 08.04.2022 அன்று மாலை இரண்டு முப்பது மணி அளவில் பாடசாலை மைதானத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் திரு. ப. மயூரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ ஞான பண்டிதா வித்தியாலய அதிபர் திரு தங்கவேலு மனோகரன் அவர்களும், நல்லூர் பிரதேச சபை செயலாளர் சுந்தரேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர்

மேலும் கெளரவ விருந்தினராக திருமதி பலராமா ரஜினிகாந்த் (கிராம உத்தியோகத்தர் J/99 ) திருமதி கமலகிருஷ்ரியா சுதர்சன் (பாலர் பாடசாலை இணைப்பாளர் நல்லூர் கோட்டம் ) போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

விருந்தினர் வருகை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை என்பவற்றுடன் ஆரம்பமாகிய விளையாட்டு நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வுக்குறிய நிதி அன்பளிப்பினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக இயக்குனரின் வேண்டுகோளுக்கு இணங்க, புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், அக்குடும்பத்தின் மூத்தவரும், லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை செயலாளரும், அறங்காவலரும், சமய, சமூகத் தொண்டருமான லண்டனில் வசிக்கும் கண்ணன் எனும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் குடும்பத்தின் நிதி அனுசரணையில் மேற்படி விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதுக்காக முழுமையாக ஒத்துழைத்த “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜாவுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை கொக்குவில் பிடாரி அம்பாள் ஆலய பாடசாலையின் நிர்வாகத்தினர் தெரிவித்து இருந்தனர்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.சொக்கலிங்கம் கருணலிங்கம் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, நிதிப்பங்களிப்பினை வழங்கியதற்கும் மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

08.04 2022.

லண்டன் “புங்குடுதீவு கண்ணன்” அவர்களின்பிறந்தநாளை முன்னிட்டு, அவரது குடும்பத்தின் நிதி அனுசரணையில், கொக்குவில் பிடாரி பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.