;
Athirady Tamil News

உடுப்பிட்டி “அமரர் சுவிஸ் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக” கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

உடுப்பிட்டி “அமரர் சுவிஸ் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக” கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

“ஆறாமாண்டு நினைவு தினம்”..
அமரர் திரு.வைத்திலிங்கம் விஜயநாதன்

“புகழோடு வாழ்ந்த பெருவள்ளல்,
புன்னகை பூவிதழ் தவழ்ந்தாடும்..
இறையோடு சேர்ந்த இந்நாளில் என்றும்,
எளியோர்க்கு ஈதலே இவர் தொண்டாகும்..
மலர் தூவி கரம் கூப்பி வணங்குகிறோம்.. அப்பா
ஆண்டு தோறும் உங்கள் நினைவில்..,
ஆற்றுவோம், உங்கள் நிதிப் பங்களிப்பில் நற்பணிகள்..

யாழ். உடுப்பிட்டியை சேர்ந்தவரும் சுவிஸில் அமரத்துவம் அடைந்தவருமான அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவாக மூன்று தினத்துக்கு முன்னர் மதியம் மரக்காரப்பளை கிராமத்தில் “அம்பிகைபாலன் கோட்டத்தில்” உள்ள ஸ்ரீ பத்திரகாளி கோயில் முன்றலில் “முதல் நிகழ்வாக” நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்களுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் அக்கிராம மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சமுர்த்தி தலைவி திருமதி.ஜெயதேவி, சமுர்த்தி தலைவி திருமதி.நி.விசிர்ரேஷன், மாதர் சங்க தலைவி திருமதி.செ.சிவசோதி, சமுர்த்தி தலைவி திருமதி.மு ராஜினி, சமுர்த்தி செயலாளர் திருமதி.த.சிந்துஜா, சமுர்த்தி செயலாளர் திருமதி.ஏ.குமுதினி, இவர்களுடன் அறநெறி ஆசிரியையும், சிவசேனைத் தொண்டரும், சிவில் சமூகப் பாதுகாப்பு உறுப்பினரும், மாதர் சங்கப் பொருளாளருமான திருமதி.க.இந்திரகுமாரி ஆகியோருடன்..

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன்,  “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.நவரத்தினம் பவளராணி, ஆகியோருடன் மாணவ,மாணவிகளும் அவ்வூர் பெரியோரும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதனையடுத்து நேற்று மாலை வவுனியா சமலங்குளம் அறநெறிப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான அப்பியாசக் கொப்பிகள் “இரண்டாவது நிகழ்வாக” வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் மாணவ மாணவிகளின் சில பெற்றோருக்கும், இன்றைய தினம் பிறந்தநாள் காணும் சமலங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தலைவர் திரு.தி.தியாகராஜா அவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வானது “சமலங்குளம் கிராம அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தில்” நடத்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டவர்களில் ஒருவரான, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தலைவர் திரு.தி.தியாகராஜா அவர்கள் பிறந்ததினமும் இன்று எனும் காரணத்தினால், அவரால் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு “இனிப்பு” வழங்கி தனது அன்பையும் பகிர்ந்து கொண்டதுடன் அமரத்துவமடைந்த அமரர்.வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்..

மேற்படி இந்நிகழ்வில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தலைவர் திரு.தி.தியாகராஜா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.கிரிஷாந்தன், ஆசிரியை திருமதி. கலாநீதன் வசந்தமலர், திருமதி.அஜந்தன் ஜனாரூபி உட்பட சமலங்குள ஊர் பெரியோர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன்,  “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.நவரத்தினம் பவளராணி, ஆகியோருடன் மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் உறுப்பினர்களில் ஒருவரும், சமய, சமூக தொண்டரும், பொதுசேவையாளருமான “குமாரண்ணர்” என அன்புடன் அழைக்கப்படும், திரு. விஜயநாதன் இரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக அக்குடும்பத்தினர் வழங்கிய நிதியில் இவ்வுதவி வழங்கப்பட்டது.

வருடாவருடம் இவர்களின் நிதிப் பங்களிப்பில் பல்வேறு உதவிகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக வழங்கப்படுவது தெரிந்ததே. அதேபோல் இவ்வருடமும் இந்நிகழ்வு நடைபெற்று ஏனைய நிகழ்வுகளும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமரத்துவமடைந்த அமரர்.திரு.வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் திரு.வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, ஆறாமாண்டு நினைவு நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது மகனான சுவிஸில் வதியும் திரு.திருமதி குமாரண்ணர் குடும்பத்தினருக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தனது மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

11.04 2022.

உடுப்பிட்டி “அமரர் சுவிஸ் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக” கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ)

சுவிஸ் அமரர் வை.விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவாக.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.