;
Athirady Tamil News

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “M.F” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள், வீடியோ)

0

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “M.F” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள், வீடியோ)
##################################

இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு பொருளாதார கஷ்டமான சூழ்நிலையில் வாழும் சில குடும்பங்களுக்கு அரிசிப் பொதிகளை வழங்கினார் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” கௌரவப் பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா அவர்கள்.

யாழ். நீர்வேலியை சேர்ந்தவரும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும், அதன் கௌரவப் பொருளாளர் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முகாமைத்துவக்குழு ஐவரில் ஒருவருமான செல்வி றம்மியா செல்வராஜா அவர்கள். தனது பிறந்தநாளை முன்னிட்டு, வவுனியா எல்லைக் கிராமமொன்றில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடியதுடன்,

அத்தோடு மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலரைத் தெரிவு செய்து அவர்களுக்கான அரிசிப் பொதியும், பயன்தரு தென்னை மரக்கன்றுகளும் தனது நிதி பங்களிப்பில் வழங்கி வைத்ததுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டியும் வழங்கி வைத்தார்.

நிகழ்வுகளில் கலந்து கொண்டோரினால் இன்றைய நாளில் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி றம்மியா செல்வராஜா வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி றம்மியா செல்வராஜா வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தாயக உறவுகளோடு இணைந்து “மாணிக்கதாசன் நறபணி மன்றம்” தெரிவித்துக் கொள்கிறது.

“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்”.. என்றும்
“மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

21.05 2022.

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “M.F” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.