;
Athirady Tamil News

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

0

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
################################

வேலணையைச் சேர்ந்தவரும், அங்கு வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது 25 ஆம் ஆண்டு சிரார்த்த ஆண்டுத் திவசத்தை முன்னிட்டு அன்னாரின் மகனும் சுவிஸ் நாட்டில் வாழ்பவருமான திரு.சுதாகரன் அவர்கள் தனது தாயின் ஆண்டுத் திவசத்தை பல்வேறு சமூகப் பங்களிப்புடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக ஒழுங்குபடுத்தி செய்து தரும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க முதல் நிகழ்வாக ஈச்சங்குள பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பத்தினருக்கு கோழியும் கோழிக் குஞ்சுகளும் வழங்கி வைக்கப்பட்ட்து.

வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுடன் வதியும் திரு.திருமதி இராஜகோபால் திலீபன் குடும்பத்தினர், “தாம் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது குழந்தையும் தமக்கு பிறக்கவுள்ள நிலையில், தமக்கு கோழிகளுடன் கூடிய சிறிய கோழிக்கூடு உள்ளது, ஆயினும் தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக பொருளாதாரக் கஸ்ரத்தில் உள்ளதினால் மேலதிகமாக சில கோழியும், கோழிக்குஞ்சசுகளும் வாங்கித் தந்துதவுமாறு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” முன்வைத்த கோரிக்கையை அப்பிரதேச “மாணிக்கதாசன் நற்பணி மன்ற இணைப்பாளர்களான திருமதி வில்வராசா ஜெயந்தினி, திரு.இராசையா இராகுலன் ஆகியோரும் உறுதிப் படுத்தியதுக்கு இணங்க இன்றையதினம் இவ்வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது 25 ஆம் ஆண்டு சிரார்த்த ஆண்டுத் திவசத்தை முன்னிட்டு இன்று அவரது நினைவாக இன்றைய பொருளாதார இக்கடடான சூழ்நிலையில் வாழும் மேற்படிக் குடும்பத்துக்கு வாழ்வாதார உதவியாக சில கோழியும், கோழிக்குஞ்சசுகளும் அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள் சார்பாக அன்னாரின் மகனான சுவிஸ் பேர்ண் பூர்க்டோர்ப் மாநிலத்தில் வசிக்கும் திரு.திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகளின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் திருமதி.வில்வராசா ஜெயந்தினி (“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஈச்சங்குள பிரதேசப் பொறுப்பாளர் மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க உபதலைவர்) தலைமை வகிக்க, திரு.இராசையா ராகுலன் (“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஈச்சங்குள பிரதேசப் பொறுப்பாளர் மற்றும் புதியநகர் சமுர்த்தித் தலைவர், கோயில் உபதலைவர்), திரு.ம.ரமேஷ் (ஈச்சங்குளம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்), “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் பயனாளிகளான திரு.திருமதி இராஜகோபால் திலீபன், மற்றும் அவர்களின் நண்பரான திரு.விக்கினேஸ்வரன் சொக்கலிங்கம் உட்பட உறவினர்களும் கலந்து கொண்டதுடன், மேற்படி வாழ்வாதார உதவிக்காக நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.திருமதி. சுதாகரன் செல்வி குடும்பத்துக்கும், இதனை முன்னின்று நெறிப்படுத்தும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும்” மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” இன, மத, பிரதேச வேறுபாடுகளை மட்டுமல்ல அரசியல் வேறுபாடுகளையும் கடந்து நடுநிலைமையுடன் அனைத்து மக்களையும் வாழ்வாதாரத்தில் முன்னேற்றவும், மற்றும் மாணவ மாணவிகளின் கல்விக்கு கரம் கொடுக்கவும் வேண்டுமெனும் ஒரே நோக்கில் செயல்பட்டு “தடைகளைத் தகர்த்து சமூகத்தை உயர்த்து” எனும் குறிக்கோளில் செயலாற்றுவது நீங்கள் அறிந்ததே..

தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு நிதிப்பங்களிப்பு தந்து, சமூகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் திரு.திருமதி. சுதாகரன் செல்வி தம்பதிகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக சொந்தங்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இறையடி சேர்ந்த அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எந்நாளும் இறைவனை இறைஞ்சு வேண்டுகிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

04.06.2022

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.