;
Athirady Tamil News

அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, முல்லைத்தீவில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, முல்லைத்தீவில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் சார்பாக அவரது குடும்பத்தினர் வழங்கிய நிதியில் வாழ்வாதார உதவியாக, மிகப்பெறுமதியான உலருணவுப் பொதிகள் முதல் நிகழ்வாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

அமரர்.திருமதி.பசுபதிப்பிள்ளை யோகம்மா..

காலனவன் தன் கணக்கை சாலவே செய்யவே
ஞாலம்விட்டு வானம் சென்றீரா?
வானம் சென்ற கானம் கேட்டு
கண்ணீர் விட்டுக் கரைகிறோம்
ஆற்றுவாரில்லை ஆறுதல் சொல்ல

சொற்கள் இல்லை சோகம் தாங்க
மீளாத் துயரில் தவிக்கிறோம்
கண்ணுக் கெட்டா தூரம் சென்றாலும்
எந்நாளும் நீங்காது, உம் நினைவுகள்..

அனலைதீவில் பிறந்து கனடாவில் அமரத்துவமடைந்த திருமதி.. அமரர்.திருமதி.பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் சார்பாக, கனடாவில் வதியும் “அன்னாரின் குடும்பத்தினர்” வழங்கிய நிதிப் பங்களிப்பில் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் மண்ணாங்கண்டல் வசந்தபுரம் கிராமத்தில் மேற்படி வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.

அமரர் யோகம்மா அவர்களின் குடும்பத்தினர் தேசியத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டதினால், மேற்படி மிகப்பெறுமதியான உலருணவுப் பொதிகள் அடங்கிய பொதிகளை முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் வழங்கி வைக்கும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” வேண்டி நிதிப் பங்களிப்பை வழங்கியதால், இவ்வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாட்டின் பொருளாதார இக்கட்டான சூழ்நிலை, எரிபொருள் தட்டுப்பாட்டு போன்ற பல நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியிலும், மேற்படி வாழ்வாதார உதவிகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இவ்வாழ்வாதார உதவிக்கான நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சில கிராமங்களில் வாழும் வயோதிபக் குடும்பங்கள், கணவரால் கைவிடப்பட்ட குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மிகவும் வறிய குடும்பங்கள் என மாணிக்கதாசன் நற்பணி மன்ற முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திரு..கந்தப்பிள்ளை விஜிதன் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அவரது தலைமையில் வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், மாணிக்கதாசன் நற்பணி மன்ற முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திரு..கந்தப்பிள்ளை விஜிதன், ஆகியோருடன் அப்பிரதேசக் கமக்கார அமைப்பின் தலைவர் திரு.காளிமுத்து சதீஷ், அக்கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.இராசு கமல், மகளிர் சங்க செயலாளர் திருமதி.மாரிமுத்து ராதிகா ஆகியோருடன் பயனாளிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி முப்பத்தியொராம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு கிராம மக்கள் கலந்து அமரர் திருமதி பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேற்படி நிகழ்வுக்கான ஏற்பாட்டை மாணிக்கதாசன் நற்பணி மன்ற சர்வதேச இணைப்பாளர்களில் ஒருவரான கனடா திரு.உதயராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமரத்துவமடைந்த அமரர்.திருமதி. பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக இரண்டாவது நிகழ்வாக மட்டக்களப்பு வவுணதீவு சக்தி இல்ல சிறுமியர்களுக்கான விசேட மதிய உணவும் வழங்கி வைக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமரத்துவமடைந்த அமரர்.திருமதி. பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இணைந்து ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் திருமதி. பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களது 31 ஆம் நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, 31 ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது குடும்பத்தினருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தலைமையகம்,
“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”
வவுனியா.

13.07.2022

அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, முல்லைத்தீவில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.