;
Athirady Tamil News

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற, புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற, புளொட் வீரமக்கள் தின நிகழ்வு..(படங்கள், வீடியோ)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளையின் வீரமக்கள் தின நிகழ்வானது நேற்றையதினம் பிரான்ஸ் பாரிஸில் உள்ள மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

புளொட் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் தோழர் ரங்கா அவர்கள் தலைமையில் ஆரம்பித்து வைக்க, புளொட் பிரான்ஸ் கிளையின் தோழர்.உதயக்குமார் தோழர்.நந்தன் ஆகியோர் தீபச்ச்சுடரை ஏற்றி வைத்தனர்.

நிகழ்வில் “மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஸ்தாபகர்களில் ஒருவரும், மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், கழகத்தின் செயலதிபருமான தோழர்.உமாமகேஸ்வரன் அவர்களையும், அவரது வழிகாட்டலில் தம்முயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகளையும் மற்றும் அனைத்து இயக்கப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவுகூர்ந்து மலரஞ்சலி நிகழ்வை புளொட் பிரான்ஸ் கிளையின் தோழர்களான சுகுமார், தயா (வவுனியா), ஜெயந்தன், சசி (முல்லை), சசி (வெள்ளை), தயா (மட்டு), தோழர்.ஆனந்தன் (சுவிஸ்) ஆகியோர் முன்னிலை வகித்து ஆரம்பித்து வைக்க கழக தோழர்கள், ஆதரவாளர்களினால் வீரமக்கள் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற, புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.. (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.