;
Athirady Tamil News

பிள்ளைக்காக “தென்னம்பிள்ளை” வழங்கிய பெருந்தகைகள்.. சுவிஸ் குமார் தர்சினி தம்பதிகள்.. (படங்கள், வீடியோ)

0

பிள்ளைக்காக “தென்னம்பிள்ளை” வழங்கிய பெருந்தகைகள்.. சுவிஸ் குமார் தர்சினி தம்பதிகள்.. (படங்கள், வீடியோ)

பிள்ளைக்காக “தென்னம்பிள்ளை” வழங்கிய பெருந்தகைகள்.. திரு.திருமதி கிருஸ்ணகுமார் தர்சினி தம்பதிகள்.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
############################

13வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

செல்வி. ‘லக்சியா’ கிருஷ்ணகுமார் (சுவிஸ்) -23.07.2022

உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்.
பேரின்பம் எதுவும் வேண்டாம்..
சின்ன சின்ன சந்தோசங்கள் போதும்
வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கு..

ரசிப்பதற்கு ஏதோ ஒன்று
கிடைத்துக் கொண்டிருக்கும் வரை
இந்த வாழ்க்கை அழகானது தான்
எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

சுவிஸ் நாட்டில் வசிக்கும் புங்குடுதீவு மற்றும் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த திரு.திருமதி கிருஷ்ணகுமார் தர்சினி தம்மதிகளின் ஏகபுத்திரி செல்வி லக்சியாவின் பதின்மூன்றாவது பிறந்தநாள் நிகழ்வை மேலும் சிறப்பாக கொண்டாடும் முகமாக பல்வேறு சமுகப் பணிகள் செய்துள்ளனர்.

திரு.திருமதி கிருஸ்ணகுமார் தர்சினி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் தமது ஏகபுத்திரி செல்வி லக்சியாவின் பதின்மூன்றாவது பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு, வன்னி எல்லைக் கிராமமொன்றில் சிறுவர், சிறுமியர் அக்கிராம மக்கள் கலந்து கொள்ள, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் செல்வி.லக்சியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் இன்றையதினம் முதல் நிகழ்வாகக் கேக் வெட்டி தாயக உறவுகளினால் கொண்டாடப்பட்டது.

வன்னி எல்லைக் கிராம பிரதேசத்தில் உள்ள சில மாணவ, மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் ஒன்றுகூடி இவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக்வெட்டி கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது மட்டுமல்லாமல்,

இன்று பிறந்தநாள் காணும் செல்வி.லக்சியாவின் பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க கலந்து கொண்டவர்களில், சிலருக்கு பயன்தரு நல்லின தென்னங்கன்றுகளின் ஒரு தொகுதியினை இன்றைய நாளில் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” கிராமிய பொறுப்பாளர்களும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இதேவேளை செல்வி.லக்சியாவின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது நிகழ்வாக மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் விசேட மதிய உணவு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக “சக்தி இல்ல மாணவிகள்” அனைவரினதும் விருப்பத்துக்கு இணங்க விசேடமாக அசைவத்துடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பல்வேறு திட்டங்களை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மூலமாக நிறைவேற்றப்பட்டிருப்பதுடன், ஏற்கனவே இவ்வாறான பல்வேறு உதவிகளை புங்குடுதீவு, மட்டக்களப்பு மற்றும் வவுனியா பிரதேசங்களில் திரு.திருமதி கிருஷ்ணகுமார் தர்ஷினி தம்பதிகள் செய்திருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இதேவேளை இன்றையதினம் நல்லின தென்னம்பிள்ளையின் நாற்றுவகையின் ஒரு பகுதியினை பெற்றுக் கொண்ட அம்மாக்களில் ஒருவர் இது குறித்துக் குறிப்பிடுகையில், “எங்களுக்கான உதவும் அமைப்பாக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் உள்ளது. அவர்களின் மூலம் நடைபெற்ற இந்நிகழ்வை வரவேற்பதுடன், இதனை செய்துதந்த தம்பதிகளை மனதார பாராட்டுவதுடன், பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளை லக்சியா அவர்களின் எதிர்காலம் சிறப்புற அமைய இறைவனை வேண்டுகிறோம்” என்றார்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி.லக்ஷியா கிருஷ்ணகுமார் அவர்களுக்கு அவரது பெற்றோர் திரு.திருமதி. குமார் தர்ஷினி, அண்ணன்மார் கீர்த்தன், அபினேஷ் மற்றும் ரஞ்சன் மாமா குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்கள் ஆகியோருடன், தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, நிதிப்பங்களிப்பினை வழங்கியதற்கும் அவரது பெற்றோருக்கு மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா.

23.07.2022

பிள்ளைக்காக “தென்னம்பிள்ளை” வழங்கிய பெருந்தகைகள்.. சுவிஸ் குமார் தர்சினி தம்பதிகள்.. ( வீடியோ)


“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.