;
Athirady Tamil News

பிள்ளைகளுக்காக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக, உலருணவுப்பொதிகள் வழங்கிய பெருந்தகைகள்.. (படங்கள் & வீடியோ)

0

பிள்ளைகளுக்காக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக, உலருணவுப்பொதிகள் வழங்கிய பெருந்தகைகள்.. (படங்கள் & வீடியோ)

############################

சுவிஸ் நாட்டில் வசிக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த ஜெயந்தன் என அன்புடன் திரு.திருமதி லிங்கேந்திரன் கயல்விழி தம்பதிகளின் செல்வப்புதல்விகளான செல்வி மதுமிதா, செல்வி.சிவானிதா ஆகிய இருவரின் “மங்கல மஞ்சள் நன்னீராட்டு” (ருதுசோபன) நிகழ்வை மேலும் சிறப்பாக கொண்டாடும் முகமாக பல்வேறு சமுகப் பணிகள் செய்துள்ளனர்.

ஜெயந்தன் என அன்புடன் திரு.திருமதி லிங்கேந்திரன் கயல்விழி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் அவர்களின் செல்வப்புதல்விகளான செல்வி மதுமிதா, செல்வி.சிவானிதா ஆகிய இருவரின் “மங்கல மஞ்சள் நன்னீராட்டு” (ருதுசோபன) விழாவின் சிறப்பான மகிழ்வுக்காக வவுனியா மதினாநகர் பிரதேசத்தில் உள்ள முஸ்லீம் மக்களுக்கான வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்ட்து.

கடந்த சிலதினங்களாக பெய்துவரும் அடைமழைக்கு மத்தியிலும் மேற்படி நிகழ்வானது மதினாநகர் பிரதேச மீள் எழுட்சி கட்டிடத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வுக்கான பயனாளிகளை சமலன்குளம் அறநெறிப் பாடசாலை ஆசிரியை திருமதி.க.வசந்தமலர் அவர்கள் தெரிவு செய்து இருந்தார்.

மேற்படி நிகழ்வில் மதீனா சங்கத்தின் சமுர்த்தி பொருளாளர் திருமதி.முகமட் நிஸாம் ஜீப்பிரியா, அரபா சங்கத்தின் சமுர்த்தி பொருளாளர் திருமதி.அப்துல் அனிஷ் முசலினா ஆகியோர் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.

செல்வி மதுமிதா, செல்வி.சிவானிதா ஆகிய இருவரின் “மங்கல மஞ்சள் நன்னீராட்டு” (ருதுசோபன) விழாவின் சிறப்பான மகிழ்வுக்காக மேற்படி நிகழ்வை மாணிக்கதாசன் நற்பணி மன்ற சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கனடாவில் வதியும் திரு.குணராஜா உதயராஜா ஏற்பாடு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

செல்வப்புதல்விகளான செல்வி மதுமிதா, செல்வி.சிவானிதா ஆகிய இருவரின் “மங்கல மஞ்சள் நன்னீராட்டு” (ருதுசோபன) விழாவின் சிறப்பான மகிழ்வுக்காக தமது பிள்ளையின் சந்தோசமான தருணத்தில் அதைக் கொண்டாடும் வகையில் இவர்களின் அன்புத்தம்பி செல்வன்.யரிஷன், அன்புத் பெற்றோர் இணைந்து வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

இதேவேளை இன்றையதினம் உலருணவுப் பொதிகளை பெற்றுக் கொண்ட அம்மாக்களில் ஒருவர் இது குறித்துக் குறிப்பிடுகையில், “எங்களுக்கான உதவும் அமைப்பாக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் உள்ளது. அவர்களின் மூலம் நடைபெற்ற இந்நிகழ்வை வரவேற்பதுடன், இதனை செய்துதந்த தம்பதிகளை மனதார பாராட்டுவதுடன், மஞ்சள் நன்னீராட்டு விழாவின் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்புற அமைய இறைவனை வேண்டுகிறோம்” என்றார்.

இன்றைய நாளில் தாயக உறவுகளோடு தமது நிகழ்வைக் கொண்டாடும் செல்வப் புதல்விகளான செல்வி மதுமிதா, செல்வி.சிவானிதா ஆகிய இருவரும் சகல கலையும் கற்று, தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி எல்லா வளமும் பெற்று சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்தும் அதேவேளை,

தங்களின் நிகழ்வை முன்னிட்டு தாயக உறவுகளின் தேவை கருதி பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கியமைக்காகவும் தாயக உறவுகளுடன் இணைந்து மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா.

25.09.2022

பிள்ளைகளுக்காக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக, உலருணவுப்பொதிகள் வழங்கிய பெருந்தகைகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.