;
Athirady Tamil News

சுவிஸ்ரஞ்சனின் பிறந்தநாள் நிகழ்வு, பல்வேறு உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ்ரஞ்சனின் பிறந்தநாள் நிகழ்வு, பல்வேறு உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
#########################

எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட மனதார வாழ்த்துகிறோம்..

தேவையறிந்து சேவை செய்வோரே
மனித வடிவில் வாழும் தெய்வம்..
காலம், நேரம், இரவுபகல், பனி, மழை,
வெயில் புயல் என எதையும் பாராது
அல்லும்பகலும் அடுத்தவர்க்காய் உழைக்கும்
உன் மனதைப் பாராட்டி வாழ்த்துகிறோம்…

கொள்கையென்று சொன்னால்
கட்சி, கழகமென்று கனவிலும்
அந்நினைவுடன் நித்தம் வாழ்கிறாய்

எங்கு நடந்தாலும் செய்தியென்று “அதிரடியாக”
செவிகளுக்கு உடன் உட்செலுத்துகிறாய்
உதவியென்று யார் கேட்பினும்,
ஓடிவந்து உடன் உதவுகிறாய்..

நீதி என்றால் நெஞ்சை நிமிர்த்தி
மரணம் தான் முடிவெனினும்
மண்டியிடாது மார்தட்டி நிற்கிறாய்
உன் தேசப்பற்றும், உன் ஊர்ப்பற்றும்
உன்னதத்திலும் உன்னதமே!

ஏனெனில் புலம் பெயர்ந்த பல பேர்
வளம் பெற்று வாழ ஆசைப்படும் நேரம்
மாறாக – நீ மட்டும்.. எம் ஊருக்காக
வாழ எப்படி உன்னால முடிகிறது..

கல்வி தேவைகட்கு கரம் கொடுத்தாய்,
வாழ்வாதாரம் அத்தனைக்கும் உதவி செய்தாய்,
பெருக்குமரத்தை மறக்க முடியாதவாறு
ஊரவர்கள் போற்ற அழகுபடுத்தினாய்
சுற்றுலாதாரர்கள் வந்து சுற்றிப்பார்த்து செல்ல
ஊர் பெருமையை உயர்த்தி வைத்தாய்,
இது மட்டுமா.. இன்னும் எத்தனை, எத்தனை..

அத்தனை புகழும் உனக்கே சேர வேண்டும் –
உன் நல்ல மனதிற்கு மணிவிழா நாளின்று
மணவிழா பத்தொன்பது இன்னும் பத்து
நூறு ஆண்டுகள் பதினாறும் பெற்று
பல்லாண்டு காலம் ரஞ்சன் மோகனா தம்பதிகள்
வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்தி வணங்குகிறோம்..
வாழ்க.. வாழ்க.. “வாழ்க வளமுடன்”

புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் புதல்வர்களில் ஒருவரான புலிக்குட்டி அன்றில் சுவிஸ்ரஞ்சன் என அன்புடன் அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களது பிறந்தநாளை அவரது சகோதரர்களின் நிதிப் பங்களிப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கமைவாக இன்று வவுனியா எல்லைக் கிராமமான கற்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து கலந்து கொண்ட சில நூற்றுக்கணக்கான பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் மிகப் பிரமாண்டமான முறையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் முக்கியஸ்தர்களான நிர்வாகசபை உறுப்பினர் திருமதி.பவளராணி நவரத்தினம், வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு. பெருமாள் சஞ்சீவன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட காலம் முதல், இன்றுவரை சுமார் நாப்பது வருடங்களாக அரசியல், சமூக சேவை எனத் தன்னை பரிணாமித்துக் கொண்ட திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களது மணிவிழா பிறந்தநாளை, அவரும், அவரை சார்ந்த தோழர்கள், நண்பர்களால் உருவாக்கப்பட்ட “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” அவரது சகோதரர்கள் விரும்பிக் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க அவர்களின் நிதிப் பங்களிப்பில், மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள், மற்றும் அக்கிராமப் பொதுமக்களின் உதவியுடன் சிறப்பாக நடைபெற்றது.

இன்றையதினம் காலை பிறந்தநாள் மணிவிழா காணும் சுவிஸ்ரஞ்சன் என அன்புடன் அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு வன்னி எல்லைக் கிராமங்களில் வாழும் தேவையுடைய கிராம மக்களுக்கு, குறிப்பாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுமார் நூற்றுக்கணக்கான அனைத்து பொதுமக்களுக்கும் வாழ்வாதார உதவியாக அரிசிப்பொதிகளும், பலருக்கு பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைத்தனர்.

மேற்படி நிகழ்வில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான தோழர். கிளிநொச்சி ராஜா எனும் திரு.மகேந்திரமும், புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான ஆசிரியர் திரு.காண்டீபனும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய தோழர். கிளிநொச்சி ராஜா எனும் திரு.மகேந்திரம், திரு.சுவிஸ்ரஞ்சனைப் பற்றி எடுத்தியம்பியதுடன், “மக்களுக்காகவே உருவாக்கிய “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” அரசியல் கலப்பிடம் இல்லாமல், இருப்பதுக்காக நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து அவர் விலகி, தனது நம்பிக்கைக்குரிய பொதுமக்களுக்கு பொறுப்புக்களை வழங்கி, ஆலோசகராக செயல்படுவது தீர்க்கதரிசனமாக செயல்” எனத் தெரிவித்தார்.

அதேபோல் ஆசிரியர் திரு.காண்டீபனும் உரையாற்றும்போது, “தான் சுமார் பன்னிரெண்டு வருடமாக சுவிஸ்ரஞ்சன் அண்ணருடன் நெருங்கிப் பழகுகிறேன் எனவும், தான் இன்று வவுனியா நகரசபை உறுப்பினராக உள்ளதுக்கு முக்கியமாக சுவிஸ் ரஞ்சன் அண்ணரும் ஒரு காரணம் எனவும்”, அவரைப் பாராட்டி உரையாற்றினார்.

இன்றுகாலை நடைபெற்ற மேற்படி நிகழ்வில், திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, பிறந்தநாள் கொண்டாட்டம் சிறுவர்களால் கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப் பாடி விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பல சிறுவர் சிறுமியர்கள், அவர்களின் பெற்றோர், அக்கிராமத்தவர்களென பலரும் கலந்து கொண்டு திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு உட்பட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுமார் நூற்றுக்கணக்கான அனைத்து பொதுமக்களுக்கும் வாழ்வாதார உதவியாக அரிசிப்பொதிகளும், பலருக்கு பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் விசேடமாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் விசேடமாக “பாயாசம்” வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு குறித்து முதல்நாளே சொல்லியும், இவ்வளவு பெருந்தொகையான சிறுவர், சிறுமியர் பொதுமக்களென சில நூற்றுக்கணக்கானோர் நிகழ்வுக்கு வருகை தந்தமைக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” வாழ்த்துக்களோடு வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டது..

அத்தோடு இன்றைய நாளில் பிறந்த நாளினை கொண்டாடும் சுவிஸ்ரஞ்சன் அவர்கள் பல்வேறு சமூகப் பணிகளை முன்னின்று செய்பவர். தான்சார்ந்த ஊரான புங்குடுதீவு மண்ணுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக யுத்தத்தினாலும் நாட்டின் பொருளாதார சூழ்நிலையாலும் பாதிக்கப்படடோருக்கான “வாழ்வாதார உதவிகள், கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் செயல்திட்டத்தை அவரது நண்பர்கள், உறவுகள், தோழர்கள் உதவியுடன் “இவரின் அரசியல், சமூக பங்களிப்பு ஆளுமைகளினால்” நிவர்த்தி செய்து உதவி புரிந்து வருபவர்.

இவ்வாறான சமூக நோக்குடன் செயல்படுபவரை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர் இன்றைய நாளில் வாழ்த்தி கௌரவித்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தாயக உறவுகளுடன் இணைந்து தெரிவித்துக் கொள்கிறது.

அதேவேளை இன்றைய நிகழ்வுகளில் நிதிப் பங்களிப்பு தந்த அவரது சகோதரர்களுக்கும் தாயக உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவிக்கிறது.

இதேவேளை தனது தந்தையாரின் பிறந்ததினமான நாளை சனிக்கிழமை 15.10.2022 அன்று மாலை ஐந்து மணிக்கு தனது மணிவிழா பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு சுவிஸ் நாட்டில் பற்றர்கிண்டன் எனும் பிரதேசத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறும் அவரது மணிவிழா பிறந்தநாள் நிகழ்வும், திருமணநாள் நிகழ்வும் சிறப்புற எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

நிர்வாகசபை உறுப்பினர்கள் சார்பாக
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

14.10.2022

சுவிஸ்ரஞ்சனின் பிறந்தநாள் நிகழ்வு, பல்வேறு உதவிகள் வழங்கி, “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக சிறப்பாகக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.