;
Athirady Tamil News

சுவிஸ் சுதா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

0

சுவிஸ் சுதா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
##############################

யாழ் வேலணை புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் புர்க்டோர்ப் மாநிலத்தில் வசிப்பவரும், சிறந்த சமய சமூகப் பற்றாளருமான சுதா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு சீவரெத்தினம் சுதாகரன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.

மேற்படி இன்றைய நிகழ்வானது வவுனியா ஆச்சிக்குளம் பிரதேசத்தில் உள்ள ஆச்சிபுரம் பிரதேச சமுர்த்தி அமைப்பின் கணக்காய்வாளர் திருமதி.அசோக்குமார் பிரியதர்ஷினி அவர்களிடம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, உடனடியாக அவரினால் ஏற்பாடு செய்யப்பட்டு “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய நிகழ்வு நடைபெற்றவேளை பலத்த மழை பெய்த போதிலும், காலதாமதமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரான பாரூக் அண்ணரின் மகன் தோழர்.சிம்சுபன், ஆச்சிபுரம் சமுர்த்தி அமைப்பின் கணக்காய்வாளர் திருமதி அசோக்குமார் பிரியதர்ஷினி, ஆனந்தபுரம் கோயில் செயலாளர் திருமதி.தனேஸ்வரன் செல்வராணி, ஆனந்தபுரம் கோயில் பொருளாளர் திருமதி.மரியசெல்வன் லதா, ஆச்சிபுரம் மாதர் சங்க செயலாளர் திருமதி ஜெகதீஸ்வரன் சசிகலா, எல்லப்பர் மருதங்குளம் சமுர்த்தி செயலாளர் திருமதி.தம்பா கஜேந்தினி, ஆச்சிபுரம் முன்பள்ளி ஆசிரியை திருமதி.காமலேஸ்வரன் ரோஷி, எல்லப்பர் மருதங்குளம் சமூர்த்திப் பொருளாளர் திருமதி. விஜயகுமார் திருமதி ஆகியோரும் விருந்தினர்களாகக் கலந்து நிகழ்வைச் சிறப்பித்து இருந்தனர்.

அந்த வகையில் இன்றைய தினம் வவுனியா ஆச்சிக்குளம் பிரதேசத்தில் மாணவர்கள் சிறுவர், சிறுமியர் அவர்களின் பெற்றோர்கள், அக்கிராம பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு திரு சுதாகரன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கு கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் சிறியோர் முதல், பெரியோர் வரை சுதா எனும் திரு.சீவரெத்தினம் சுதாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும்முகமாக கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப்பாடி தமது பிறந்த நாள் வாழ்த்தினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதேவேளை சுதா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு சுதாகரன் அவர்களது குடும்பத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன், பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் அக்கிராம மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் சுதாகரன் அவர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரையான தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தின் அனைத்து நிகழ்வுகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வாழ்வாதார உதவிகள் வழங்கி தாயக மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் சமூக நற்பணிகளுக்காக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதேவேளை இறுதிநேரத்தில் அறிந்தும் உடனடியாக நிகழ்வில் கலந்து சிறப்பித்த புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரான பாரூக் அண்ணரின் மகனான திரு.சிம்சுபன் அவர்கள் வாழ்த்துரையின் போது, “சுதாகரன் அண்ணா சிறப்பாக நீடூழி வாழ்வதுடன், அவரும், அவரது குடும்பத்தினரும் நோய்நொடியின்றி வாழ வாழ்த்துவதுடன் அவர்கள் செய்த இவ்வுதவிக்கு மனதார நன்றி தெரிவிப்பதுடன், இதுபோன்ற புலம்பெயர் உறவுகளின் உதவிகளுக்கு நன்றிகளையும் தெரிவிப்பதுடன், மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இதுபோன்ற சேவைகளை தொடர்ந்தும் சிறப்பாக செய்ய வேண்டும்” எனவும் வாழ்த்தினார்.

இதேவேளை திரு.சுதாகரன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தாயக உறவுகளுக்கு வழங்கிய வாழ்வாதார உதவிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.திருமதி. சுதாகரன் செல்வி குடும்பத்தினருக்கு இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரையான தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

31.01.2023

சுவிஸ் சுதா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.