;
Athirady Tamil News

சுவிஸ் சூறிச் மாநகரில் மாபெரும் மேதின ஊர்வலம் (அறிவித்தல்) -VIDEO-

0

சுவிஸ் சூறிச் மாநகரில் மாபெரும் மேதின ஊர்வலம் (அறிவித்தல்)

தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே, கழகத் தோழர்களே.. தோழமைக் கட்சி உறுப்பினர்களே, ஆதரவாளர்களே..

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2023 மே முதலாம் திகதி திங்கள்கிழமை காலை ஒன்பது மணிக்கு சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொள்ளும் தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்து கொண்டு, இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்க சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை செய்யக் கோரி குரல் கொடுத்து எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்கு இட்டுச்செல்ல வலுச் சேர்ப்போமாக.

எம் ஒவ்வொருவரையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையில் உள்ளோமென்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம், அந்தவகையில் கடைமையுணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் தம்மாலியன்ற பங்களிப்பினை செய்ய வேண்டும் என புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தோழமையுடன் கேட்டுக் கொள்ளும்;

அதேவேளையில், மக்களின் விடுதலைக்கு தோள் கொடுக்க விரும்பும் அனைவரையும் இவ்மேதின ஊர்வலத்திற்கு தோழமையுடன் அழைக்கின்றோம்.

இம்முறை மேதின ஊர்வலமானது 01.05.2023 திங்கள்கிழமை காலை ஒன்பது மணிக்கு (09.00) வழமை போல் சூரிச் ஹெல்வெத்தியா பிளாட்சில் (Helvethiya Platz) இருந்து ஆரம்பமாகும்.

“அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே”

தொடர்புகளுக்கு..
தோழர்.சிவா 078.916 71 11, //
தோழர்.செல்வபாலன் 076 445 41 12, //
தோழர்.வரதன் 079 210 45 66, //
தோழர்.ஆனந்தன் 079 109 63 42, //
தோழர்.ரமணன் 079 349 73 93, //
தோழர்.மனோ 078 957 12 75, //
தோழர்.பாபு 076 584 81 52, //
தோழர்.பிரபா 079 940 19 82, //
தோழர்.ராசன் 079 847 22 51, //
தோழர்.சுவிஸ்ரஞ்சன் 077 948 52 14,

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) சுவிஸ்கிளை
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) சுவிஸ்கிளை

சுவிஸ் சூறிச் மாநகரில் மாபெரும் மேதின ஊர்வலம் (அறிவித்தல்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.