18 March 2017 0 Comments Report

இன்று மாலையில், புங்குடுதீவில் நடைபெற்ற “உதைபந்தாட்ட போட்டி” தொடர்பான தகவல்களும், படங்களும்… (பகுதி -2)


இன்று மாலையில், புங்குடுதீவில் நடைபெற்ற “உதைபந்தாட்ட போட்டி” தொடர்பான தகவல்களும், படங்களும்… (பகுதி -2)

“புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் சார்பாக புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, விளையாட்டு வீரர்களுடன் பொதுமக்களும் பெருமளவில் பங்குபற்றி வருகின்றனர்.

ஏற்க்கனவே “அம்பாள்” விளையாட்டுக் கழகம், “சென்.சேவியர்” விளையாட்டுக் கழகம், “பாரதி” விளையாட்டுக் கழகம், “ஈஸ்ரன்” விளையாட்டுக் கழகம் ஆகியவை இன்று காலையில் நடைபெற்ற போட்டிகளின் மூலம் இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகி இருந்த நிலையில், மதிய இடைவேளைக்கு பின்னர் ஆரம்பித்த போட்டியில்..

ஐந்தாவது போட்டியில் “சன் ஸ்ரார்ஸ்” விளையாட்டுக் கழகம், “வயலூர் முருகன்” விளையாட்டுக் கழகத்தை ஒன்றுக்கு சைபர் (1 – 0) கோல் கணக்கில் வெற்றியீட்டி, அடுத்த சுற்றுக்கு “சன் ஸ்ரார்ஸ்” விளையாட்டுக் கழகம் தெரிவாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றுப் போட்டியில், முதலில் “நண்பர்கள்” விளையாட்டுக் கழகம், “அம்பாள்” விளையாட்டுக் கழகத்தை ஒன்றுக்கு சைபர் (1 – 0) கோல் கணக்கில் வெற்றியீட்டி, அடுத்த சுற்றுக்கு “நண்பர்கள்” விளையாட்டுக் கழகம் அரை இறுதிக்கு தெரிவாகி உள்ளது. (அம்பாள் விளையாட்டுக் கழகம், “பனால்ட்டி சூட்” ஒன்றினை, தவறவிட்டு இருந்தனர்.)

இரண்டாவது சுற்றுப் போட்டியில், இரண்டாவதாக “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழகம், “ஈஸ்ரன்” விளையாட்டுக் கழகத்தை ஒன்றுக்கு சைபர் (1 – 0) கோல் கணக்கில் வெற்றியீட்டி, அடுத்த சுற்றுக்கு “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழகம் அரை இறுதிக்கு தெரிவாகி உள்ளது.

இதேவேளை “சென் சேவியர்” விளையாட்டுக் கழகம், “பாரதி” விளையாட்டுக் கழகத்தை ஒன்றுக்கு சைபர் (1 – 0) கோல் கணக்கில் வெற்றியீட்டி, “சென் சேவியர்” விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி உள்ளது.

ஆகவே நாளையதினம் முதலில் “நண்பர்கள்” விளையாட்டுக் கழகமும், “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழகமும் அரை இறுதிப் போட்டியில் மோதி, அதில் வெற்றியீட்டும் கழகம், இறுதிப் போட்டிக்கு தெரிவாகி உள்ள மற்றோரு விளையாட்டுக் கழகமான “சென் சேவியர்” விளையாட்டுக் கழகத்துடன் இறுதிப் போட்டியில் மோத உள்ளனர்.

நாளைக்கு மதியம், 14.00 மணிக்கு ஆரம்பமாகும் அரையிறுதி போட்டி, இறுதிபோட்டி, பரிசளிப்பு விழா போன்றவற்றுக்கு முன்பாக, புங்குடுதீவில் “வரலாற்றில் முதன்முறையாகக் களம்கண்ட” இரண்டு விளையாட்டுக் கழகங்களான, “தாயகம்” விளையாட்டுக் கழகமும், “வயலூர் முருகன்” விளையாட்டுக் கழகமும் “காட்சி உதைபந்தாட்டப் போட்டி”யில் ஈடுபடுவர் எனவும் அறிய தருகிறோம்.

தாயகம் சமூக சேவை அகத்தின் தலைவி திருமதி.த.சுலோசனாம்பிகை, போஷகர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு உலக மையத் தலைவர் திரு.பி.சதீஷ், “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழக தலைவி திருமதி.சி.கலாநிதி (கலா அக்கா), தாயகம் சமூக சேவை அமைப்பின் உபசெயலாளர் செல்வி.காஞ்சனா ஆகியோருடன், மாலையில் திரு.அருணாசலம் சண்முகநாதன் (சமூக சேவகர்), திரு குணாளன் கருணாகரன் (புங்குடுதீவு உலக மைய செயலாளர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

நாளை (19.03.2017) ஞாயிற்றுக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பமாகும், மேற்படி நிகழ்வில் அனைத்து மக்களும் வருகை தந்து, ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

தகவல்…
செல்வி.ஜெகந்தினி முத்துக்குமாரு,
செயலாளர்,
தாயகம் சமூக சேவை அகம்,
புங்குடுதீவு.

தொடர்புபட்ட செய்திக்கு…

தற்போது புங்குடுதீவில் நடைபெறும் “உதைபந்தாட்ட போட்டி” தொடர்பான தகவல்களும், படங்களும்… (பகுதி -1)

*** இந்த செய்தியில் உள்ள படங்களின் மேலே, இரண்டு முறை “கிளிக்” பண்ணி (அழுத்தி) பார்ப்பதன் மூலம், படங்களை தெளிவாகவும், பெரிதாகவும் பார்க்க முடியும்.. ***


Post a Comment

*