17 April 2017 0 Comments Report

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “கௌரவிக்கப்பட்ட மாணவர்கள் & விருந்தினர்கள்”… (படங்கள்)


சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட மாணவர்கள் & விருந்தினர்கள்… (படங்கள் & வீடியோ)

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களினால் வழங்கப்பட்ட நிதியில், பத்து இலட்ச்ம் இலங்கை ரூபா தொகையை, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், “அம்பலவாணர் கலைப்பெருமன்றம்” அமைப்பிடம் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதன்மூலம் அம்பலவாணர் அரங்கின் அலுவலக அறை கட்டப்பட்டு திறந்து வைக்கப் படடது.

நேற்றுமுன்தினம் திறப்புவிழா நடாத்தப்பட்ட, புங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கத்தின்” திறப்பு விழாவின் போது, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், இந்த அரங்குக்காக நிர்மாணிக்கப்பட்ட அலுவலக அறையினை, தீவக கல்வித் பணிப்பாளர் உயர்திரு சு.சுந்தரசிவம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை இவ்வருட ஆரம்பத்தில், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடாத்திய “வேரும் விழுதும் விழாவிற்கு” வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கான நினைவுப்பரிசில்கள் மற்றும் கேடங்களை இங்கு வைத்து நாம் வழங்குவதற்குத் தவறியிருந்தோம்.

இந்நிலையில் அவற்றை நாம் எமது ஒன்றிய உறுப்பினர்களான திரு. பாலசிங்கம் தயாபரன், திருமதி செல்வி சுதாகரன் ஆகியோர் ஊடாகவும், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளர் திருமதி.சிலோசனாம்பிகை தனபாலன் அவர்களின் ஊடாக வழங்கி இருந்தோம்.

அவற்றை இன்றையதினம் நடைபெற்ற “அம்பலவாணர் கலையரங்கு திறப்பு விழா” நிகழ்வின்போது திரு. இளங்கோவன், திரு. பொன் சுந்தரலிங்கம், திரு.எஸ்.கே. சண்முகலிங்கம், திரு. சதாசிவம் (கிளி மாஸ்ரர்) ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அதேபோல் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீடசையில் வெற்றியீட்டிய புங்குடுதீவு அமெரிக்க மிஷன் பாடசாலை மாணவி செல்வி மதுஷிகா மதிவதனன் அவர்களுக்கு, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில், புங்குடுதீவு மண்ணின் மைந்தரான திரு.இ.இளங்கோவன் முன்னிலையில், வடமாகாண சபை அமைச்சர் திரு.குருகுலராஜா பொன்னாடை போர்த்து கௌரவிக்க, யாழ். அரச அதிபர் திரு.நா.வேதநாயகன் “சுவிஸ் ஒன்றிய” பணமுடிப்பை வழங்கி கௌரவித்தார். இதன்போது எமது சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களான திரு. பாலசிங்கம் தயாபரன், திருமதி செல்வி சுதாகரன் ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.,

அதேபோன்று தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தையும், வட மாகாணத்தில் முதலாமிடத்தையும் பெற்ற புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய மாணவன் வரதராஜா டிலச்னுக்கும் ஒரு சிறுதொகை பணப்பரிசிலை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவருக்கான “சுவிஸ் ஒன்றியத்தின்” மெடலையும் வழங்கி, பொன்னாடை போர்த்து, பணமுடிப்பை வழங்கிக் கௌரவித்தது திரு.பாலசுந்தரம்பிள்ளை (யாழ். பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மற்றும் வாழ் நாள் பேராசிரியர்), இவருக்கான “சுவிஸ் ஒன்றியத்தின்” கேடயத்தை வழங்கியது “சங்கீத பூஷணம்” திரு.பொன் சுந்தரலிங்கம்.

முன்னிலை வகித்தோர் திரு. இ.இளங்கோவன் (வடமாகாண சபை ஆளுநரின் செயலாளர்), திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (சமூக சேவகர்& முன்னாள் அதிபர் & புங்குடுதீவு அபிவிருத்தி ஒன்றிய தலைவர்), திருமதி.த. சுலோசனாம்பிகை (புங்குடுதீவு அபிவிருத்தி ஒன்றிய பொருளாளர்), செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு (“தாயகம்” அமைப்பின் செயலாளர்) ஆகியோர் ஆவர்.

இதேவேளை மேற்படி கௌரவிப்பையும், உதவித் தொகையையும் பெற்றுக் கொண்ட மாணவன் வரதராஜா டிலக்சன் அவர்களும், அவரது தாயாரும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, “தமக்கு வழங்கிய உதவிக்கு நன்றி எனவும், ஒன்றியத்தை சேர்ந்த அனைவருக்கும் இதனை தெரிவிக்குமாறும்” தெரிவித்து உள்ளனர்.

இதுக்கு மாணவன் செல்வன்.வரதராஜா டிலக்சனுக்கும், அவரது தாயாருக்கும் பதிலளித்த சுவிஸ் ஒன்றியத்தின் தலைவர், “இது தனிப்படட எமது பங்களிப்பு இல்லை, சுவிஸில் வாழும் புங்குடுதீவு மக்களின் பங்களிப்பினாலேயே, “சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில், இந்த சிறு உதவியை செய்து உள்ளோம் எனவும், இதுக்கு நீங்கள் செய்யும் கைமாறு என்னவெனில், படித்து நல்லதொரு நிலைக்கு வந்து, புங்குடுதீவு வாழ் மக்களுக்கு உதவி செய்வதையே, அனைத்து புங்குடுதீவு மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்” எனவும் தெரிவித்தார்.

மேற்படி கௌரவிப்பு நிகழ்வை, அம்பலவாணர் கலையரங்கு திறப்பு விழாவின் போது, விருந்தினர்களைக் கொண்டு, “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் அதனை வழங்கி கௌரவிக்க, நாம் கேட்டதை ஏற்று, மனமகிழ்வுடன் நடாத்திய “புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்ற” நிர்வாக சபையினருக்கும், குறிப்பாக திரு.பொன் சுந்தரலிங்கம் அவர்களுக்கும் எமது “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் எமது நன்றி..

இதேவேளை “தனிப்பட்ட விஜயமாக” இலங்கை சென்று இருந்த போதும், ஒன்றிய நிர்வாக சபையின் வேண்டுகோளை ஏற்று, இந்நிகழ்வில் ஒன்றியத்தின் சார்பில் கலந்து கொண்ட, எமது ஒன்றிய உறுப்பினர்களான திரு. பாலசிங்கம் தயாபரன், திருமதி. செல்வி சுதாகரன் ஆகியோருக்கு, “புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றம்” நிர்வாகசபை சார்பாக, அதன் தலைவர் திரு.இ.இளங்கோவன், உப தலைவர் திருமதி.த.சுலோசனாம்பிகை ஆகியோரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி..

இவ்வண்ணம்..
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.


Post a Comment

*