16 April 2017 0 Comments Report

புங்குடுதீவு “அம்பலவாணர் கலையரங்கம்” திறப்பு விழா: இரண்டாம்நாள் காலை அமர்வு.. (படங்கள் & வீடியோ) -பகுதி-4


புங்குடுதீவு “அம்பலவாணர் கலையரங்கம்” திறப்பு விழா: இரண்டாம்நாள் காலை அமர்வு.. (படங்கள்) -பகுதி-4

நேற்றுக்காலை “புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கு” மண்டப சுற்றுமதில், பெரிய அம்பலவாணர், சின்ன அம்பலவாணர் ஆகியோரின் உருவச்சிலைகள் திரைநீக்கம் செய்யப்பட்டு கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே..

திறப்பு விழாவைத் தொடர்ந்து, மங்கள வாத்திய இசை நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரை நடைபெற்றது. இதனை அடுத்து “மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம்” அவர்களின் சார்பில் உருவாக்கப்படட “எம்.எஸ்.எஸ் பவுண்டேசன்” சார்பில் மாணவ மாணவிகளுக்கான அனுசரணை வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டனர்.

இதன் பின்னர் நேற்றுமாலை, நாட்டிய நடனங்கள், வில்லுப்பாட்டு, தவில் இசைக்கச்சேரி, போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மீண்டும் இன்றுகாலை இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது.

இன்றுகாலையில் விருந்தினர்கள் வரவேற்பு, விருந்தினர்கள் உரை, “தாயகம்” சமூக சேவை அகம் மாணவிகளின் வரவேற்பு நடனம் ஆகியன நடைபெற்று தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது. அத்துடன் பேராசிரியர் திரு.கா.குகபாலன் அவர்களினால் எழுதப்பட்ட “தீவகம்; தொண்மையும், மேன்மையும்” எனும் நூலும் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டதுடன், விழா தொடர்ந்து நடந்து வருகிறது..

இது தொடர்பான செய்திகளும், படங்களும், வீடியோக்களும் “அதிரடி” இணையத்தில் தொடரும்…

** தகவல் & படங்கள்.. திரு. பரமலிங்கம் தர்ஷானந்த் மற்றும் “அதிரடி” இணையத்துக்காக, செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமாரு (“தாயகம்” சமூக சேவை அகத்தின் செயலாளர்)

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

புங்குடுதீவு “அம்பலவாணர் கலையரங்கம் திறப்பு விழா ஆரம்பம்… (படங்கள்) -பகுதி-1

புங்குடுதீவு “அம்பலவாணர் கலையரங்கம்” திறப்பு விழா: மங்கள விளக்கேற்றல் & விருந்தினர்கள் உரை… (படங்கள்) -பகுதி-2

புங்குடுதீவு “அம்பலவாணர் கலையரங்கம்” திறப்பு விழா: மாலை நிகழ்வுகள், நாட்டிய நடனங்கள், வில்லுப்பாட்டு, தவில் இசைக்கச்சேரி… (படங்கள் & VIDEO) -பகுதி-3


Post a Comment

*