20 April 2017 0 Comments Report

எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா?..!!

நம் அன்றாட உணவில் பழங்கள், பயறு வகைகள், நட்ஸ் போன்றவற்றினை சேர்த்து கொள்வது மிக அவசியம். ஒருநாளுக்கு தேவையான ஆற்றல் இதிலிருந்தே பெறப்படுகிறது.

ஆனால் எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் என்று உள்ளது. இதை சரியாக பின்பற்றினால் உடலினை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.

வாழைப்பழம்

உடலுக்கு தேவையான சக்தியினை உடனடியாக தரும் ஆற்றல் கொண்டது வாழைப்பழம். காலை உணவுடன் இதனை நாம் சேர்த்து கொள்ளும்போது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இதனை மாலை வேளையிலும் எடுத்து கொள்ளலாம்.

ஆப்பிள்

பொதுவாக ஆப்பிளை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதில் அதிகளவு இரும்புசத்துள்ளதால் பாலுடன் சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டும்.

உருளைகிழங்கு

உருளைகிழங்கில் கார்போஹைட்ரேட்டானது நிறைந்துள்ளது. இது உடலுக்கு அதிக ஆற்றலினை வழங்குகிறது.

காலை மற்றும் மதிய உணவில் இதனை சேர்த்து கொள்வது நன்மை தரும். இரவில் உருளைகிழங்கினை சேர்த்து கொள்வதால் தூங்குவதில் பிரச்சனை உண்டாகலாம்.

ஆரஞ்சு

விட்டமின் சி சத்து ஆரஞ்சில் நிறைந்துள்ளது. எனவே இதனை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் உண்பதை தவிர்க்கவேண்டும். இது அஜீரணத்தை ஏற்படுத்திவிடும்.

நட்ஸ்

நட்ஸ் வகைகளை எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றம் மற்றும் விட்டமின்கள் கிடைக்கிறது.

ஓட்ஸ்

ஓட்ஸை காலை உணவாக நாம் எடுத்துக் கொள்வதால் அதிலுள்ள பைபர் அதிகளவு பசியினை கட்டுப்படுத்துகிறது, இது உடல் எடையினை குறைக்க உதவும்.

சாதம்

மதிய வேளையில் சாதத்தினை உண்பதன் மூலம் அது எளிதில் செரித்து அதிலுள்ள சத்துக்கள் உறிஞ்சி கொள்ளப்படுகிறது. இரவு உணவில் இதனை தவிர்ப்பது நல்லது.


Post a Comment

*