;
Athirady Tamil News

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!!

0

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 4 மண்டலங்களில் தொற்று பாதிப்பு தலா ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அண்ணாநகரில் 1,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதமாக பாதிப்பு மிகவும் குறைவாக இருந்த அம்பத்தூரில் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு 913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திரு.வி.க.நகரில் 885 பேர், அடையாறில் 689 பேர், வளசரவாக்கத்தில் 652 பேர், தண்டையார்பேட்டையில் 606 பேர் பாதிப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தற்போது 10,685 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதற்கேற்ப கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 12,931 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் சென்னையில் 4,286 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தவாரம் வரை பாதிப்பு சதவீதம் 3 ஆக இருந்த நிலையில் தற்போது 4 ஆக உயர்ந்துள்ளது.பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + seven =

*