;
Athirady Tamil News

பிக் பாஸ் 2: கமல் செய்த பரிந்துரை?..!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரவாரத்துடன் தனது இரண்டாவது சீசனை அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. மீண்டும் கமல்ஹாசனே நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டதில், அவரது ரசிகர்களுக்கு ஏகபோக மகிழ்ச்சி. அரசியல் பயணத்தின் காரணமாக இந்த வேலையை கைமாற்றிவிட்டால் என்ன செய்வது என யோசித்தவர்கள், அவரது அரசியல் கட்சியின் சின்னத்தைப் போல கைகளை விடாமல் பிடித்துக்கொண்டதை வரவேற்றனர். நிகழ்ச்சித் தொகுப்புடன் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொள்ள கமல்ஹாசன் தயாராக இல்லை.

15 போட்டியாளர்கள் பங்கேற்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இம்முறை யார் யார் பங்கு பெறப் போகிறார்கள் என்பதில் இஷ்டத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. கமல்ஹாசனே கலந்துகொள்கிறார் என்று யூடியூப்பில் வீடியோ பதிவு செய்தாலும் லட்சம் பேர் பார்க்கின்றனர். இந்த நிலையில் உண்மையான செய்திகள் காணாமல் போகின்றன. அப்படித்தான் நடிகை கஸ்தூரி பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக வெளியான தகவலும் காணாமல் போனது. இதுகுறித்து விசாரித்தபோது, கஸ்தூரியை உள்ளே கொண்டுவர பேச்சுவார்த்தைக்குத் தயாராவதை உறுதிபடுத்தினார்கள் பிக் பாஸ் குழுவினர். கஸ்தூரி இல்லையென்றால் யார் என்று விசாரித்தபோது, கமல்ஹாசனுக்கு நன்கு பழக்கமான நடிகை சிம்ரன் என்ற பெயரைச் சொல்கிறார்கள்.

சிம்ரனும் கமல்ஹாசனும் நீண்டகால நண்பர்கள் எனினும் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இருவருக்குமிடையேயான இடைவெளி அதிகரித்தது. அதிக படங்களில் ஒன்றாக நடித்தவர்கள் என்பதாலும், தனிப்பட்ட முறையில் நன்கு புரிந்துகொண்ட நண்பர்கள் என்பதாலும் சிம்ரன் நிகழ்ச்சியில் இடம்பெறுவது நல்ல மைலேஜைக் கொடுக்கும் என கமல் வைத்திருக்கும் பிக் பாஸ் டீமிலிருந்து அறிவுரை சொல்லப்பட்டிருப்பதால், கமலும் அதை அப்படியே பிக் பாஸ் நிகழ்ச்சியின் தலைமை தேர்வுக் குழுவுக்குத் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 18 =

*