;
Athirady Tamil News

நட்சத்திரப் பட்டாளத்தில் இணைந்த மாதவன்..!!

0

தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அழுத்தமான கதாபாத்திரங்களை சரியாகத் தேர்வு செய்து நடித்துவரும் மாதவன் தற்போது முதன்முறையாக ஷாருக் கானுடன் இணைந்து நடித்துவருகிறார்.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த மாதவன் முழுவதும் குணமாகி தற்போது படங்களில் நடித்துவருகிறார். ஏற்கனவே மாதவன் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’, தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய், தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் படம் ‘ஜீரோ’. இந்தப் படத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடித்துவருகிறார். இதன் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது படக்குழு 45 நாள்கள் அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியில் படப்பிடிப்பை நடத்திவருகிறது. இதில் மாதவன் தற்போது இணைந்துள்ளார்.

உயரக் குறைபாடு உள்ள மனிதராக ஷாருக் கான் நடிக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. அனுஷ்கா ஷர்மா, கேத்ரினா கைஃப் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகை ஸ்ரீ தேவி நடிப்பில் வெளியான கடைசிப் படம் மாம். ஆனால் அவர் ஜீரோ படத்திலும் நடித்துள்ளார். இதனால் இப்படம் ஸ்ரீ தேவி நடித்த கடைசிப் படம் என்ற பெயரைப் பெறவுள்ளது. மேலும் சல்மான் கான், ராணி முகர்ஜி, கஜோல், கரிஷ்மா கபூர், ஆலியா பட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆனந்த் ராய் இயக்கும் இந்தப் படத்திற்கு ஹிமான்ஷு ஷர்மா திரைக்கதை எழுதியுள்ளார். டிசம்பர் 21ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*