;
Athirady Tamil News

காஜோல் குரல் கொடுத்த ஹாலிவுட் படம்..!!

0

தி இன்கிரிடிபிள்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகை காஜோல் பணியாற்றியுள்ளார்.

அனிமேஷன் சூப்பர் ஹீரோ படமான தி இன்கிரிடிபிள்ஸ் 2004ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி பெரும் கவனம் பெற்றது. இதன் இரண்டாம் பாகம் 14 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியாக உள்ளது. பிராட் பேர்டு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தை பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. வில்லனின் அறிமுகத்தோடு முதல் பாகம் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் ஜூன் 15ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் இந்தியாவில் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் ஜூன் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதன் இந்திப் பதிப்பிற்காக ஹெலன் பார் கதாபாத்திரத்திற்கு நடிகை காஜோல் டப்பிங் செய்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + eighteen =

*