;
Athirady Tamil News

மலையாளத்தில் ஏன் வாய்ப்பு இல்லை?..!!

0

‘மலையாளத்தில் ஏன் எனக்கு வாய்ப்புகள் தரப்படுவதில்லை எனத் தெரியவில்லை’ என நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன். அதன்பின் மலையாளப் படங்களில் நடித்தும் இருக்கிறார். ஆனால், கடைசியாக 2015ஆம் ஆண்டு சைகல் படுகயானு எனும் படத்தில் நடித்ததற்குப் பிறகு எந்த மலையாளப் படத்திலும் அவர் நடிக்க அழைக்கப்படவில்லை.

இதுகுறித்து பிரபல மலையாள மீடியா ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், “நான் மலையாளத்தில் நடித்து மூன்றாண்டுகள் ஆகிறது. அதற்குப் பிறகு என்னை ஏன் நடிக்கக் கூப்பிடவில்லை எனத் தெரியவில்லை. இதனால் எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை. ஆனால், தமிழ் சினிமாவில் இதுபோல செய்ய மாட்டார்கள். தமிழில் ஒருவர் வெற்றிப்படம் கொடுத்தால் ஒருபோதும் அவர்களைக் கைவிடுவதேயில்லை. ஆனால், மலையாளத்தில் மட்டும் ஏன் இப்படிப் புறக்கணிக்கிறார்கள் எனும் காரணம் இப்போதுவரை புரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தமிழில் ‘நட்புனா என்னன்னு தெரியுமா’ படத்தில் ரம்யா நம்பீசன் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*