;
Athirady Tamil News

அடுத்த படத்திற்குத் தயாரான ஜோதிகா..!!

0

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ள காற்றின் மொழி படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மொழி படத்திற்குப் பின் மீண்டும் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கிறார். இப்படத்திற்கு காற்றின் மொழி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இது உருவாகிறது.

சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த இந்தப் படம் எஃப்.எம். ரேடியோ தொகுப்பாளினியான குடும்பத் தலைவி சந்திக்கும் பிரச்சினைகளைப் பேசியது. இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். அவரது கணவராக மானவ் கவுல் நடித்திருந்தார்.

தமிழில் காற்றின் மொழி என்ற பெயரில் தயாராகும் இதில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். கணவராக விதார்த் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 4ஆம் தேதி துவங்குகிறது. மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவாளராகவும், கே.எல்.பிரவீன் எடிட்டராகவும் பணிபுரிகின்றனர்.

இப்படத்தை 30 நாட்களில் ஒரே ஷெட்யூலில் முடித்து, அக்டோபர் மாதம் வெளியிட படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் திட்டமிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − four =

*