;
Athirady Tamil News

காலாவைக் காப்பாற்றுவாரா விஷால்..!!

0

ரஜினிகாந்தின் காலா திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் வெளியிட அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்ததற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காலா படம் தொடங்கியது முதல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. படத்தின் தலைப்பு முதல் வெளியீடு வரைக்கும் இந்த பிரச்சினை தொடர்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாவது உறுதியாகி உள்ளது. இந்தநிலையில் கர்நாடக வர்த்தக சபை இப்படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை விதித்திருக்கிறது.

‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதித்திருக்கும் கர்நாடக வர்த்தக சபைக்கு எதிராக ரஜினி தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் இதுவரை வெளிவரவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயம் அடைந்தவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்த பின் இன்று (மே 30) செய்தியாளர்களை சந்தித்த ரஜினி காலா தடை தொடர்பாக கருத்து தெரிவித்தார். அப்போது, “நேற்றுதான் அது நடந்திருக்கிறது. அப்புறம் பார்க்க வேண்டும். கர்நாடக வர்த்தக சபை, தென்னிந்திய தயாரிப்பாளர் கவுன்சிலுக்குள் அடங்கும். அதனால் அவர்களால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது” எனப் பதிலளித்தார்.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தயாரிப்பாளரான நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஜினி அவர்கள் காவிரி பிரச்சினை சம்பந்தமாக கருத்துகள் கூறியது அவரது பேச்சு சுதந்திரம். அந்தக் கருத்து பொதுநலன் கருதிய பொறுப்பாகும். அதற்கு காலா திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது எப்படி சரி?. காலா திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாக அம்மாநில திரைப்பட சகோதரர்கள் பேசித் தீர்வு காணவேண்டும். ஏன் என்றால் நாம் எல்லோருமே இந்தியர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

காலாவுக்கு தடை விதித்த கர்நாடக வர்த்தக சபையுடனும், காலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிறிய கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*