;
Athirady Tamil News

களவாணி 2: களத்தில் ஓவியா..!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவேற்புக்குப் பிறகு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவரும் ஓவியா, களவாணி 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

சற்குணம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் களவாணி. விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஓவியா. தமிழில் அறிமுகமான ஓவியாவின் முதல் படமே அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தஞ்சாவூர் வட்டார கிராமப் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் கிராமத்துப் பெண்ணாய் கவனம் ஈர்த்தார் ஓவியா.

களவாணி படத்திற்குப் பிறகு சற்குணம் இயக்கிய வாகை சூடவா விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் வசூலில் சாதனை புரியவில்லை. இதனையடுத்து இயக்கிய நையாண்டி, சண்டிவீரன் படங்களும் ஏமாற்றத்தைத் தந்தன. இதன் காரணமாக களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கிவருகிறார் சற்குணம்.

முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா ஜோடி இதிலும் நடிக்கின்றனர். விமல் சம்பந்தபட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது ஓவியாவுக்கான காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன. தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கன்னக்குடி பகுதியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் தற்போது ஓவியாவும் இணைந்திருக்கிறார்.

சற்குணம் தனது வர்மன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*