;
Athirady Tamil News

‘அருவி’ இயக்குநருடன் சிவகார்த்திகேயன்?..!!

0

‘அருவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் கவனத்தை ஈர்த்த இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தனது முதல் படைப்பான ‘அருவி’ படத்தின் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். ஒரு பெண்ணின் பார்வையில் சமூகப் பிரச்சினைகளைக் காத்திரமாக முன்வைத்திருந்த அருண் பிரபுவுக்கும், நாயகி அதிதி பாலனுக்கும் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்தப் படம் தந்த வரவேற்பால் தனது அடுத்த படத்துக்குத் தயாராகி இருக்கிறார் அருண் பிரபு.

சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ மற்றும் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய படங்களை தயாரித்துவரும் ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ் ’ நிறுவனம் அடுத்ததாக அருண் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் பூஜை நேற்று (மே 29) குமுளி அருகில் உள்ள பளியங்குடி என்ற இடத்தில் நடைபெற்றது. இந்தப் பூஜையில் ‘24ஏஎம் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், எடிட்டர் ரேமண்ட், லயோலா கல்லூரி புரொஃபசர் ராஜநாயகம், கவிஞர் அறிவுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

‘அருவி’ படத்தில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்த ரேமண்ட் இதிலும் பணிபுரிகிறார். ‘மேயாத மான்’ படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் குமார் இசையமைக்கிறார். பொதுவாகவே ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார் என்றால், அது சிவகார்த்திகேயன் படமாகத்தான் இருக்கும் என்று முடிவு கட்டப்படும் நிலையில், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை எனத் தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*