;
Athirady Tamil News

முதல்வரை விமர்சிக்கும் பிரியா பவானி..!!

0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு, அரசுதான் நடவடிக்கை எடுத்தது என தியேட்டரில் விளம்பரம் போட்டுவிடாதீர்கள் எனக் கிண்டலாகக் கோரிக்கை வைத்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

சின்னத்திரையில் அறிமுகமாகி ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் கதாநாயகியாக இடம் பிடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். இவர் கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடிய போராட்டத்துக்கு தற்போது கிடைத்திருக்கும் வெற்றிதான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்கத் தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு.

இது பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியா, “அரசுதான் நடவடிக்கை எடுத்தது என தியேட்டரில் விளம்பரம் போட்டுவிடாதீர்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது மகிழ்ச்சி. ஆனால் இன்னும் கொஞ்ச நாள்ல சினிமா தியேட்டர் இன்டெர்வல்ல ‘மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துச்சுன்னு’ விளம்பரம் மட்டும் போட்டுடாதீங்க ப்ளீஸ். ஏற்கனவே ஜல்லிக்கட்டு உரிமையை மக்களுக்குத் தமிழக அரசு எப்படி போராடி வென்று எடுத்துச்சுன்னு போடுற குறும்படமே போதும். அடிப்படை வாழ்வாதாரத்துக்கும் உரிமைக்கும் போராடிக்கிட்டு இருக்குற மக்களுக்கு கிடைச்ச சின்ன வெற்றியா இது இருந்துட்டு போகட்டும்” என கிண்டலாக விமர்சித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*