;
Athirady Tamil News

அடுத்த ஆட்டத்துக்கு ரெடியான சுசீந்திரன்..!!

0

சுசீந்திரன் இயக்கத்தில் விளையாட்டை மையப்படுத்தி உருவான வெண்ணிலா கபடிக் குழு, ஜீவா ஆகிய இரு படங்களும் வெற்றிபெற்ற நிலையில், தனது அடுத்த படத்தையும் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்குகிறார்.

சுசீந்திரன் பெரிதும் எதிர்பார்த்த ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, புதுமுகங்களை வைத்து ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதேநேரத்தில் ‘ஜீனியஸ்’ என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார்.

சுசீந்திரன் அடுத்ததாக, கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். ‘சாம்பியன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 30) துவங்கியிருக்கிறது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சுசீந்திரன், “இன்று கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து ‘சாம்பியன்’ என்ற திரைப்படத்தைத் துவங்கியுள்ளோம். வெண்ணிலா கபடிக் குழு, ஜீவா திரைப்படத்தை தொடர்ந்து நான் இயக்கும் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரோஷன் என்ற புதுமுக ஹீரோ அறிமுகமாகிறார். அஞ்சாதே நரேன், ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் இவர்களுடன் மிருணாளினி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள் வெற்றி பெறுவதோடு, தற்போது அத்தகைய படங்களுக்கு வரவேற்பும் கிடைத்துவருவதால் இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளார் சுசீந்திரன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + eleven =

*