;
Athirady Tamil News

நடாஷாவைத் தேர்ந்தெடுத்த ராஜுமுருகன்..!!

0

ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜிப்ஸி’ படத்துக்கு, நடாஷா சிங் கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

தன்னுடைய எழுத்துகளிலும் சரி, சினிமாவிலும் சரி… சமூகப் பிரச்சினைகளையும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலையும் முன்னிறுத்தும் இயக்குநர் ராஜுமுருகன், தனது மூன்றாவது படத்துக்குத் தயாராகியுள்ளார். குக்கூ, ஜோக்கர் ஆகிய இரண்டு படங்களிலும் முன்னணி நாயகிகளை ஒப்பந்தம் செய்யாமல் தனது கதைக்கான நாயகியாக புதுமுகங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். அதே பாணியை இந்தப் படத்திலும் பின்பற்றியிருக்கிறார்.

ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ஸி (நாடோடி) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கான நாயகி தேர்வு நீண்ட நாள்களாக நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் நடாஷா சிங் நடிப்பது உறுதியாகியுள்ளது.

‘மிஸ் இமாச்சல் பிரதேஷ்’ பட்டம் வென்ற நடாஷா, மாடலிங் துறையிலும் தனி இடத்தைப் பெற்றவர். அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். பழைமைவாதக் குடும்பத்திலிருந்து வரும் கூச்ச சுபாவமுடைய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − seven =

*