;
Athirady Tamil News

வியாபாரத்தைத் தொடங்கிய ரைஸா படம்..!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரைஸா இணைந்து நடிக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் வியாபாரப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் அறிமுகமாகும்போது பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. நிகழ்ச்சி முடியும் வரை விமர்சனங்கள் தொடர்ந்தாலும் அதில் பங்கேற்றவர்களுக்குத் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற்றுத் தரத் தவறவில்லை. இதில் மற்ற பங்கேற்பாளர்களைக் காட்டிலும் ஹரிஷ் கல்யாணும் ரைஸாவும் முன்னணியில் இருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 2 தொடங்கவுள்ள நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள பியார் பிரேமா காதல் வெளியீட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன.

இளன் இயக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்து யுவன் ஷங்கர் ராஜாவே தயாரிக்கிறார். காமெடி கலந்த காதல் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுவந்த நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சிக்காக அசெர்பைஜன் நாட்டுக்குப் படக்குழுச் சென்றுள்ளது.

பட உருவாக்கப் பணிகள் ஒருபுறம் நடைபெற்றாலும் படத்தின் வியாபாரம், வெளியீடு தொடர்பான வேலைகளும் வேகம் எடுத்துள்ளன. அதன்படி, இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் மற்றும் கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × one =

*