;
Athirady Tamil News

காக்கி ரூட்டை பிடித்த அதர்வா..!!

0

தமிழ் சினிமாவில் இளம் தலைமுறை நடிகர்களில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்துவரும் அதர்வா, அடுத்ததாக காக்கி ரூட்டைப் பிடித்திருக்கிறார்.

அதர்வா நடித்திருக்கும் ‘செம போத ஆகாதே’ திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துவரும் ‘பூமராங்’ படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து அடுத்ததாக ‘டார்லிங்’ சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிக்கிறார். காவல் துறையை மையமாகக்கொண்டு உருவாகவிருக்கும் இந்தப் படத்துக்கு 100 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஹன்சிகா, அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். 100 என்பது காவல் துறைக்கான அவசர அழைப்பு என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் காக்கி உடை அணிந்த தோற்றத்தில் அதர்வா இடம்பெற்றிருக்கிறார். அவரின் சட்டை பேஜ்ஜில் ஜி.சத்யா எனப் பெயர் இருப்பதால், சத்யா என்ற கேரக்டரில் நடிக்கிறார் எனத் தெரிகிறது.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இதற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பை மேற்கொள்ள, திலீப் சுப்பராயன் சண்டைக் கலைஞராகப் பணிபுரிகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 13 =

*