;
Athirady Tamil News

விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘எக்ஸ் வீடியோஸ்..!!

0

ஆபாச இணையதளங்கள் வெளியிடும் வீடியோக்கள் சமூகத்தை எப்படி பாதிக்கின்றன என்பதைச் சொல்வதாக உருவாகியுள்ளது ‘எக்ஸ் வீடியோஸ்’ திரைப்படம்.

தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஹரியின் உதவியாளரான சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். அஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆஹிருதி சிங் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். பிரபுஜித், ரியாமிக்கா, ஷான், அர்ஜுன், அபினவ் மஹாஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலர் ஷாடோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இன்று (ஜூன் 1) வெளியாகும் இந்தப் படம் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று (மே 31) மாலை சென்னை – சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. படத்தில் பணியாற்றிய கலைஞர்களிடம் படம் குறித்து கலந்துரையாடினோம்.

படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ள அர்ஜுன் படம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார். “நான் ரோஹன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். சஜோ சுந்தர் இயக்குகிறார். அவரே திரைத் துறையில் எனக்கு காட் ஃபாதர். 2015ஆம் ஆண்டு பெங்களூர் நாள்கள் படத்தில் லட்சுமி ராயின் பாய் ஃப்ரெண்டாக நடித்தேன். அப்போதே எனது அடுத்த படத்தில் நீ நடிக்க வேண்டும் என சஜோ சார் கூறினார். அப்படித்தான் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படத்தின் தலைப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இது ஆபாச இனையதளத்தை மட்டும் குறிப்பதற்காக அல்ல. அந்த ‘எக்ஸ்’ என்பதன் அர்த்தம் ‘தவறான’ என்றும் பொருள்படும். தவறான வீடியோக்கள் என்பதே சரி. ஆபாச இணையதளங்கள் வெளியிடும் இந்த வீடியோக்கள் சமூகத்தை எப்படி பாதிக்கின்றன என்பதைக் கூறியிருக்கிறோம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியான செல்போன், இணையதளம் ஆகியவை எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றியும் காட்டியுள்ளோம். அடுத்ததாகப் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் படம் பேசுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

டோரா படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்திருந்த ஷான் இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். படம் குறித்து அவரிடம் கேட்டபோது, “இது 18 வயது நிரம்பியவர்கள் பார்க்கக்கூடிய படம். அதற்காக ஆபாசம் நிறைந்தது அல்ல. அடல்ட் காமெடி படமும் இல்லை. சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இது இருக்கும். குடும்பத்தினருடன் சென்று பார்க்கலாம். மொபைல்போன் நமது வாழ்வில் எவ்வளவு தாக்கத்தையும் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்தப் படம் மூலம் அறியலாம்” என்று கூறினார்.

மற்றொரு வில்லனாக நடித்துள்ள அபினவ் மஹாஜித், “எக்ஸ் வீடியோஸால் ஒரு குடும்பம் எப்படி இறந்தது என்பதை சஜோ சார் கூறினார். உணர்வுபூர்வமான திரைக்கதையைப் படைத்துள்ளார். கணவன், மனைவிக்கு இடையே நடைபெற்ற உரையாடல்கள் அவர்களது அலைபேசியின் தொடர்பில் உள்ளவர்களுக்குக் கூகுள் டிவைஸ் மூலம் அனுப்பப்பட்ட சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களுக்கு நான் எதிரானவன் இல்லை என்றாலும் பாதுகாப்பின்மை குறித்த அச்சம் உள்ளது. இந்தப் படமும் அந்த உணர்வை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 5 =

*